Connect with us

இயக்குனரே இல்லாமல் ஒரு படமா? – கேலிக்கு உள்ளான யோகிபாபு பட போஸ்டர்..!

Cinema News

இயக்குனரே இல்லாமல் ஒரு படமா? – கேலிக்கு உள்ளான யோகிபாபு பட போஸ்டர்..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானவர் நடிகர் யோகிபாபு. 2009 ஆம் ஆண்டு யோகி என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்போதைய காலக்கட்டத்தில் இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் 2014 இல் அவர் நடித்த மான் கராத்தே, காக்கா முட்டை போன்ற திரைப்படங்களில் நடித்த பிறகு இவர் சற்று பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற துவங்கினார் யோகி பாபு.

yogi babu

தமிழில் பெரும் கதாநாயகர்களான விஜய், அஜித், ரஜினி என பலருடனும் நடித்துள்ளார். சர்க்கார், வாரிசு திரைப்படங்களில் விஜய்யையே கலாய்த்து நடித்திருப்பார் யோகி பாபு, அதே போல தர்பார் படத்தில் பெரும் நடிகர் ரஜினிகாந்தையே கலாய்ப்பது போன்ற காட்சிகள் அமைந்திருப்பதை பார்க்க முடியும்.

இந்த படத்தின் பல போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால் இறுதியாக வெளியான போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. போஸ்டரில் கதாநாயகன், யோகிபாபு, தயாரிப்பாளர் பெயர் எல்லாம் பெரிதாக உள்ளது. ஆனால் படத்தின் இயக்குனர் கீராவின் பெயரை காணவில்லை.

கீழே படத்திற்கு பணிப்புரிந்தவர்கள் பெயர் சின்னதாக இருக்கும். அதில் இயக்குனரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இயக்குனரே இல்லாத படம் என கூறி அந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top