மக்களே நம்பாதீங்க ட்வீட்டிய யோகி பாபு... அவர் மீதே புகார் கொடுத்த இயக்குனர்... என்ன நடந்தது?
யோகிபாபுவின் ஒரு ட்வீட்டால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். அமீர் நடிப்பில் வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் நடிகராக எண்ட்ரி கொடுத்தார். பின்னர் சுந்தர் சி.யின் கலகலப்பு, பட்டத்து யானை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஷாருக்கானுடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்ததே இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது.
பின்னர் சிவகார்த்திகேயனுடன் இவர் நடிப்பில் வெளியான மான் கராத்தே யோகி பாபுவிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. 2016ல் மட்டும் 20 படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்தார். அதே சமயம் கல்யாண வயசு பாடல் வைரலானது.
இதை படிங்க: 12 வருடங்களுக்கு முன்பு நடித்த யோகி பாபு… ஞாபகம் வைத்து வரவேற்ற ஷாருக் கான்… என்ன மனுஷன்யா!!
2021ல் இவர் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது ட்வீட் செய்து இருக்கும் பதிவால் மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்து இருக்கிறார். தாதா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. இதில் யோகி பாபுவை முன்னிலை படுத்தி ப்ரோமோஷன்கள் செய்திருந்தனர்.
ஆனால் இதனை மறுத்த யோகி பாபு நான் இந்த படத்தில் ஹீரோவாக பண்ணவில்லை. நிதின் சத்யா தான் நாயகனாக நடித்திருக்கிறார். அவர் நண்பராக மட்டுமே நடித்திருக்கிறேன். இந்த போஸ்டர்களை நம்ப வேண்டாம் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், தாதா படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர், தாதா படத்தினை எந்த தயாரிப்பாளரும் வாங்க விடாமல் செய்து இருக்கிறார். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் நடிக்கவே இல்லை என சொன்னாலும் நாங்கள் கவலைப்பட போவதில்லை என்றார். இதனால் யோகிபாபுவின் மீது ரெட் கார்ட் கொடுக்கப்படலாம் எனப் பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.