இன்னொரு வடிவேலுவாக மாறும் யோகிபாபு...இது எங்க போய் முடியுமோ!...
சினிமாவை பொறுத்தவரை வாய்ப்பு தேடி அலையும் போது ஏதேனும் வாய்ப்பு கொடுத்தால் போதும் என நினைப்பார்கள். வாய்ப்பு கிடைத்த பின் சம்பளத்தில் கறார் காட்டுவார்கள்.
இது காமெடி நடிகர்களுக்கும் பொருந்தும். மிகவும் பிரபலமாகி விட்டால் அவர்கள் சொல்வதுதான் சம்பளம். இஷ்டப்பட்ட நேரத்திற்கு வருவார்கள். மூடு மாறிவிட்டால் வீட்டிற்கு சென்று விடுவார்கள். திரையில் அவர்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு நடிகர்களின் உண்மையான முகமும், படப்பிடிப்பில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாது.
வடிவேலு பீக்கில் இருந்த நேரத்தில் ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் கணக்கு. ஆனால், காலை 11 மணிக்குதான் வருவார். 12 மணிக்கு கேரவானுக்குள் சென்று விடுவார். மதியம் 3 மணிக்கு பின் வெளியே வருவார். சரியாக 5 மணிக்கு வீட்டிற்கு சென்று விடுவார். அவரிடம் கறாராக பேச முடியாது என்பதால் எல்லோரும் பொறுத்துகொண்டார்கள். மேலும், அவரின் காமெடிக்காக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்.
தற்போது அதே பாணியை யோகிபாபுவும் கடைபிடிக்க துவங்கியிருக்கிறாராம். ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் சம்பளம் பெறும் வரும் அவர் இஷ்டப்பட்டு நேரத்திற்கு வந்துவிட்டு, குறைவான நேரம் மட்டும் நடித்து விட்டு வீட்டுக்கு சென்று விடுகிறாராம். அவரிடம் எப்படி சொல்வது என பலரும் தயங்கி வருகிறார்களாம்.
வாய்ப்பு இருக்கும் வரைதான் சினிமாவில் மார்க்கெட். கொம்பாதி கொம்பலென்ல்லாம் காணாமல் போயிருக்கிறார்கள். இதே வடிவேலுவை 4 வருடங்கள் தமிழ் சினிமா கண்டு கொள்ளவில்லை. அந்த கேப்பில் வந்தவர்தான் யோகிபாபு.
யோகிபாபுவுக்கு கடிவாளம் போடப்போடுவது யார்?...