தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு நிகராக பார்க்கப்படும் காமெடி நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் யோகிபாபு. இவர் படங்களை கடக்காமல் நாம் எந்த ஒரு படத்தையும் பார்க்க முடிவதில்லை. வெளியாகும் அத்தனை படங்களிலும் ஜொலிக்கும் மன்னனாக திகழ்ந்து வருகிறார்.

அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் டஃப் கொடுக்கும் ஒரே நடிகர் இப்பொழுது இவர் தான். எப்படித்தான் மனுஷன் ரெஸ்டே இல்லாமல் நடிக்கிறார் என்று பல சக நடிகர்கள் சொல்ல நாம் கேட்கிறோம். அப்படி எல்லா படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு சண்டைக்காட்சிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கு ஒரு குரூப்பில் இருக்கும் அடியாள் வேடத்தில் மட்டுமே இருந்து வந்தார்.போக போக காமெடியில் உச்சம் பெற்று ஹீரோவாகவும் உயர்ந்தார்.
இதையும் படிங்க :இந்த எம்.ஜி.ஆர் படத்துக்கு இவ்வளவு தடங்கல் வந்ததா?? என்னப்பா சொல்றீங்க??
கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகவே நடித்தார். அதன் பின் மண்டேலா படம் இவருக்கு ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது. இதுமட்டுமில்லாமல் நம் சொந்தக்காரர் போல பழகும் மனநிலையை காண்பித்து விடுவார் யோகிபாபு. அந்தளவுக்கு எதார்த்தமாக பழகக்கூடிய ஒரு நடிகர்.

அதனாலேயே பல முன்னனி நடிகர்களுக்கு பிடித்தமான காமெடி நடிகராகவே வலம் வருகிறார். இந்த நிலையில் ஒரு படத்தில் யோகிபாபுவுக்கு அப்பாவாக நடிக்க ஒரு பிரபலத்திடம் சொல்ல அதற்கு அவர் எனக்கு வேண்டுமென்றால் அவர் அப்பாவாக சரியாக இருப்பார், என்னால் முடியாது என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.
அவர் யாரென்றால் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா குரூப்பில் பேசும் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம். இவர் பட்டிமன்றத்தில் பேசும் போது எதிரணியை செமயாய் கலாய்த்து பேசக்கூடியவர். சமீபத்தில் துணிவு படத்தில் கூட பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். அதுவும் இந்த படத்தின் மூலம் முதன் முதலாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.

இதற்கு முன்பாகவே யோகிபாபுவுக்கு அப்பாவாக நடிக்க ஒரு படத்தில் அழைப்பு வர அவருக்கு அப்பாவா நானா? அவர் எனக்கு வேண்டுமென்றால் அப்பாவாக நடிக்கலாம் என்று வாய்ப்பை மறுத்துவிட்டாராம் மோகனசுந்தரம். இதற்கு முன் பட்டிமன்ற பேச்சாளார் ராஜா வரிசையில் இப்பொழுது மோகனசுந்தரமும் இணைந்துள்ளார். இதை மோகனசுந்தரமே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
