பாவனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யோகிபாபு!.. 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு பிளாஷ்பேக்!..

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் நன்றாக பேச தெரிந்த நடிகை பாவனா. டீன் ஏஜில் சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்து இயக்குனர் சிகரம் பாலச்சந்தரே அவரை பாராட்டி கடிதம் எழுதினார்.

அதன்பின் சில படங்களில் நடித்தார். தமிழில் இதுவரைக்கும் 13 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அஜித்துடன் அசல் படத்தில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிய பாவனாவை சிலர் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு பின்னணியில் மலையாள நடிகர் ஒருவரின் பெயர் அடிபட்டு சில நாட்கள் அவர் சிறையிலும் இருந்தார்.

இதையும் படிங்க: பராசக்தி படத்திலிருந்து தூக்கப்பட்ட சிவாஜி!.. அதுக்காக அவர் பட்ட கஷ்டம்!..

bhavana

அதிலிருந்து ஒருவழியாக மீண்டு கன்னட படங்களில் நடிக்க துவங்கி அங்கு முன்னணி நடிகையாகவும் மாறினார். அதன்பின் சில மலையாள படங்களிலும் நடித்தார். நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். பல வருடங்களுக்கு பின் The Door என்கிற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரின் சகோதரரே இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒருநாள் படப்பிடிப்பில் ‘உங்களை பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்’ என ஒருவர் சொல்ல, ‘என்னை பார்க்க இங்கே யார் வரப்போகிறார்’ என யோசித்த பாவனா ‘சரி வர சொல்லுங்கள்’ என சொல்ல, வந்தவர் யோகிபாபு. இவர் ஏன் நம்மை பார்க்க வருகிறார் என ஆச்சர்யத்தோடு பாவனா பார்க்க ‘மேடம் நான் உங்களின் ரசிகன். நீங்கள் நான் நடித்த தீபாவளி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களில் கூட்டத்தில் ஒருவனாக நடித்திருக்கிறேன். நாளை நீங்கள் என் வீட்டிற்கு விருந்துக்கு வர வேண்டும்’ என யோகிபாபு கோரிக்கை வைக்க மகிழ்ச்சியுடன் அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டாராம்.

yogi1

yogi1

அந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் பக்கத்திலேயே யோகிபாபு வீடு உள்ளது. எனவே, பாவனாவை வந்திருப்பதை கேள்விப்பட்டே யோகிபாபு அவரை சந்தித்திருக்கிறார். அடுத்தநாள் அவரின் வீட்டுக்கு பாவனா போக கோழி, மீன், நண்டு, மட்டன் என பல வகையான உணவுகளை டைனிங் டேபிள் முழுவதும் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம் யோகிபாபு. ஆனால், ‘நான் டயட்டில் இருக்கிறேன்.. இவ்வளவையும் சாப்பிட முடியாது’ என பாவனா சொல்ல ‘சரி எல்லாவற்றிலும் ஒரு வாயாவது சாப்பிடுங்கள்’ என ஆசையாக யோகிபாபு கோரிக்கை வைக்க அப்படியே விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றாராம் பாவனா.

இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த வேடத்தில் நடிக்க பயந்து காய்ச்சலில் படுத்த சிவாஜி!.. நடிகர் திலகத்துக்கே இப்படி ஒரு நிலையா?..

 

Related Articles

Next Story