மீண்டும் கவுண்டமணி செந்தில் காம்போ...! இயக்குனரின் முயற்சியால் உருவெடுக்கும் கூட்டணி...
கிட்டத்தட்ட 70, 80 களில் இருந்தே நகைச்சுவை ஜாம்பவான்களாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் நடிகர் செந்தில். இவர்கள் நடிக்கிறார்களா என்று கேட்டு நடிக்கும் நடிகர்கள் தான் அந்த காலகட்டத்தில் ஏராளம்.
இவர்கள் ஒருவரையொருவர் கிண்டலடித்து கொண்டு செய்யும் அந்த ரகளை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் இன்றளவும் சிரிக்க வைக்கிறது. இன்று இளசுகள் செய்யும் அத்தனை மீம்ஸ்களுக்கும் இவர்களின் நகைச்சுவை தான் முன்னோடியாக திகழ்கிறது.
இந்த வகையில் நம்மை மகிழ்வித்த இவர்களின் கூட்டணி வரிசையில் தற்போது உள்ள நகைச்சுவை நடிகர்களில் யாரும் இல்லை என்று நினைக்கும் போதுதான் வருத்தம் கூடுகிறது. ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் வந்து நடித்தாலும் அவர்கள் செய்யும் நகைச்சுவையில் பஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ காஃபி வித் காதல்’.
இந்த படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கிறார். கூடவே நடிகர் ரெடின் கிங்ஸிலியும் சேர்ந்து நடிக்கிறார். சுந்தர்.சி இவர்கள் இருவரையும் கவுண்டமணி செந்தில் போன்று உருவாக்க போகிறாராம். அவர்கள் எந்த அளவிற்கு பேசப்பட்டார்களோ அதே போல் இவர்களையும் கொண்டு வரப் போகிறாராம். அதற்காக முழு வீச்சில் இறங்கியுள்ளார் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி.