யோகிபாபுவால் ஒரு வீடே போச்சு! இந்த ஆதாரம் போதுமா? வேதனையில் தயாரிப்பாளர்

by Rohini |   ( Updated:2024-08-31 10:28:37  )
yogibabu
X

yogibabu

Actor Yogibabu: தமிழ் சினிமாவில் ஒரு பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகிபாபு. சமீப காலமாக யோகி பாபுவை பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. வலைப்பேச்சு சேனலுக்கும் யோகிபாபுவுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் வலைப்பேச்சில் பிஸ்மி யோகிபாபுவால் பாதிப்புக்குள்ளான தயாரிப்பாளர் ஒருவரை அழைத்து வந்து அவருடைய பிரச்சனைகளை மக்களுக்கு தெரியப்படுத்திருக்கிறார்.

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடித்த ‘லோக்கல் சரக்கு’ படத்தின் தயாரிப்பாளர் தான் சுவாமிநாதன். அந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கான தன் சம்பளத்தை முழுவதுமாக பெற்றுக் கொண்டாராம். அதுவும் நான் முழு மூச்சுடன் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று சொன்னதின் பெயரில் தான் தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: எஸ்.பி.பிக்கு மாற்றாக மனோவை கொண்டு வந்த இளையராஜா!.. மாஸ்டர் பிளானா இருக்கே!…

ஆனால் பிப்ரவரி ஒன்றாம் தேதி பணத்தை வாங்கிய யோகிபாபு கிட்டத்தட்ட ஒன்பது மாதம் கழித்து தான் நடிக்க வந்தாராம். காரணம் கேட்டால் அந்தப் படத்தில் பிஸியாகி விட்டேன். இந்த படத்தின் சூட்டிங்கில் இருக்கிறேன் என சொல்லிக்கொண்டே கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கடத்தியிருக்கிறார் .செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் வரைக்கும் அந்த படத்தில் நடித்து கொடுத்தாராம்.

இத்தனைக்கும் அவருடைய கால்சீட் மொத்தம் ஒன்பது நாட்கள் தானாம். அதற்கு 2 1/2 வருடங்கள் ஆகிவிட்டதாம். அது முழுக்க முழுக்க யோகிபாபுவினால் தான் எனது தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். டப்பிங்காவது ஒழுங்கா வருவார் என பார்த்தால் டப்பிங் முடிக்க கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகிவிட்டதாம். ஒரு நாள் டப்பிங்கிற்கு வந்த யோகிபாபு தனக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூற உடனே மருத்துவரை அழைத்து பார்க்க சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர்.

இதையும் படிங்க: எங்கேயும் ஓடி ஒளியவில்லை! பாலியல் புகார் பற்றி வாய் திறந்த மோகன்லால்..

இருந்தாலும் எனக்கு மிகவும் முடியவில்லை. அதனால் நான் வீட்டுக்கு செல்கிறேன் என கிளம்பி விட்டாராம். மறுநாள் டப்பிங்கிற்கு வருவார் என நினைத்து யோகி பாபுவுக்கு போன் செய்தால் நான் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன் என கூறினாராம் யோகி பாபு. அதைக் கேட்டதும் தயாரிப்பாளர் சுவாமிநாதனுக்கு அழுகையே வந்து விட்டதாம்.

பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஓடி ஓடி போகும் யோகிபாபு ஏன் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வர மறுக்கிறார் என எங்களுக்கு தெரியவில்லை .அந்தப் படத்தை என்னுடைய அக்காவும் என்னுடைய மனைவியும் சேர்ந்து தான் தயாரித்தார்கள். யோகிபாபுவின் இந்த கொடுமையால் என் அக்கா அவருடைய வீட்டையே விற்று விட்டாள். அவருடைய குடும்பத்திலும் பல பிரச்சினைகள். இதனால் எங்கள் நிம்மதியே போய்விட்டது. என்னுடைய புரொடக்ஷன் கம்பெனியையே இழுத்து மூடி விட்டேன் என தயாரிப்பாளர் சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இலவச உணவு கொடுப்பதை தடுக்கும் சூரியின் ஹோட்டல் ஊழியர்கள்!.. மதுரையில் பரபரப்பு!..

Next Story