வேட்டிகள் பலவிதம்.. மாளவிகா தனிவிதம்… தோழி பற்றிய அந்த ரகசியத்தை வெளிச்சம் போட்டு காட்டீங்களே…

Published on: July 12, 2022
---Advertisement---

சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிட்ச்சையமானார் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

malavika

மேலும், கடைசியாக தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். இதனையடுத்து தெலுங்க படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார்.

தற்போது, ஒரு புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார், அதில் அவர் ‘வேஷ்டி’ கட்டி இருக்கிறார். மேலும், என் தோழி ஒருவர் இந்த ஸ்டையில் வேஷ்டி கட்ட சொல்லி தந்தார், அவர்  இன்ஸ்டாவில் இல்லாததால் நான் அவளைக் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்களேன் – இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு… நயன்தாராவின் புதிய படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

இதற்கிடையில், மாருதி இயக்கும்  ‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.