இரத்தம்.. வெட்டுக்குத்து.. கொலை!.. கிரிமினல்கள் கையில் சிக்கியிருக்கிறதா சினிமா?!..

by sankaran v |
Nelson LC
X

Nelson LC

சமீபத்தில் வரும் படங்கள் எல்லாமே அதீத வன்முறையையும், சமூகத்தை சீரழிக்கும் போதை பொருள்கள் சார்ந்த காட்சிகளையும் கொண்டே வருகின்றன. இது போன்ற படங்கள் தொடர்ந்து வருவதால் இன்றைய இளம் தலைமுறையை அவை கெடுத்து விடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படம் வன்முறை அதிகளவில் இருந்தது.

வில்லன் ஒருவரை சுத்தியலால் ரத்தம் தெறிக்க அடித்தேக் கொல்கிறான். அதே போல கைதி, விக்ரம், பைட் கிளப் என எல்லாப் படங்களும் லோகேஷ்க்கு ரத்தக்களரியாகத் தான் வந்துள்ளன. இதுகுறித்து பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தமிழ்த்திரை உலகம் முழுக்க முழுக்க கஞ்சா, போதை பொருள் சார்ந்தே படங்கள் வந்த வண்ணம் உள்ளது. இன்றைக்கு பல பள்ளி மாணவர்களையே இந்தப் போதை பொருள்கள் ஆக்கிரமித்து வருகிறது. பைட் கிளப், விக்ரம், கைதி என லோகேஷ் கனகராஜின் பல படங்கள் போதைப் பொருள்கள் சார்ந்தே எடுக்கப்பட்டுள்ளது.

நெல்சன், அப்பாஸ் போன்ற இயக்குனர்களின் படங்களும் முழுக்க முழுக்க வன்முறை, போதை என போய்க்கொண்டு இருக்கிறது. சமூகத்தை சீரழிக்கிற படைப்புகள், வில்லத்தனம் பண்ணும் ஹீரோ என சினிமா எதை நோக்கிப் போகிறது என்று தெரியவில்லை. லோகேஷ், நெல்சன் போன்ற டைரக்டர்கள் எல்லாம் இலக்கியத்தைப் படிக்கணும். அதைக் கூட படிக்க வேண்டாம். முன்னாடி கலைஞர்கள் எப்படி இருந்தாங்கன்னு பார்க்கணும். நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிப் படிங்க. அவர் நடிப்பையே விட்டு விட்டாராம்.

ஏன்னா எமன் வேடம் போட்டு நாடகத்தில் நடிப்பாராம். அப்போது கர்ப்பிணிகள், மனம் பலவீனமானவர்கள், குழந்தைகள் இருந்தால் அந்த நாடகத்தைப் பார்க்காதீங்கன்னு அறிவிப்பாங்களாம். அப்படி ஒருமுறை வேடம் போட்டு நடித்த போது ஒரு பெண்ணோட கர்ப்பமே கலைந்து போனதாம். இதைக் கேள்விப்பட்டதும் அன்று முதல் அப்படிப்பட்ட நாடகங்களில் நடிக்கவே மாட்டாராம். அதன்பிறகு அவர் நாடகமே எழுத ஆரம்பித்தாராம்.

அரியலூர் மணி என்பவர் இலங்கைத் தமிழர் பிரச்சனையை பாடல் மூலமாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துள்ளார்கள். அவர்கள் மனிதர்களா? இது மாதிரி இயக்குனர்கள் மனிதர்களா... இனியாவது இவர்கள் மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

Next Story