அண்ணாச்சி வெளியேறியதற்கு நீங்க ரெண்டு பேரும் தான் காரணம்.! கொந்தளித்த ராஜு பாய்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் 5வது சீசனில் அடியெடுத்து ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஐந்து சீசன்களும் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார்.
இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்பொழுது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த 5வது சீசன் நிகழ்ச்சியில் வயது அதிகம் கொண்ட போட்டியாளராக விளையாடியது இமான் அண்ணாச்சி தான்.
இவர் 50 நாட்களுக்கு மேல் விளையாடிய நிலையில் கடந்த இரு வாரத்திற்கு முன் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்றைய எபிசோடில் பிரியங்கா மற்றும் நிரூப்பை பார்த்து அண்ணாச்சி வெளியேறியதற்கு காரணம் நீங்கள் இருவரும் தான் என ராஜு கூறியுள்ளார். அதாவது உங்கள் இருவரது பிரச்சனையால் அவர் அதிகம் குழம்பி அவர் கடைசியில் வெளியில் சென்று விட்டார் என ராஜு கூறியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பிரியங்காவும் நிரூப்பும் 200 சதவீதம் அதற்கு நாங்கள் காரணமில்லை. என ராஜுவிடம் விளக்கம் அளித்தனர். எது எப்படியோ இந்த பிக் பாஸ் விளையாட்டு இப்படித்தான் போட்டியாளர்களை குழப்பி அவர்களில் யார் தெளிவாக விளையாடுகிறார்களோ அவர்களே இறுதியில் ஜெயிப்பார்கள்.