லோகேஷ், அட்லீ, விக்கி எல்லாம் எந்த மாதிரி ஆளுங்கனு தெரியுமா...? பொறாமையில் வசைபாடும் இசைவாரிசு...!
இன்று தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களையே ஆட்டம் காண வைக்கும் இளம் இயக்குனர்கள் பலர் வந்து கொண்டிருக்கின்றனர். ஜாம்பவான்களாக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், மணிரத்னம், சங்கர் போன்ற மாபெரும் இயக்குனர்கள் பிரமிக்கும் வகையில் தற்போது உள்ள இயக்குனர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசக்கூடிய இயக்குனர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் அட்லீ, லோகேஷ், விக்னேஷ் சிவன், நெல்சன் போன்றோர். இவர்களை பற்றி இசைவாரிசும் இயக்குனருமான வெங்கட்பிரபு ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்தார்.
அட்லீ, லோகேஷ், விக்னேஷ் சிவன், நெல்சன் போன்றோர் ஒன்றாக சினிமாவிற்குள் வந்தவர்கள். ஒரே கேங்க். கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வந்து இன்று உலகமே போற்றும் வகையில் உயர்ந்துள்ளனர். ஒருபுறம் அட்லீ, மறுபக்கம் லோகேஷ், அந்த பக்கம் விக்கி என சினிமாவையே தன் ஆளுமைக்கு கீழே வைத்திருக்கின்றனர்.
அவர்களை பார்க்கும் போது ஒரு எனர்ஜி, ஒரு சந்தோஷம் இந்த மாதிரியான உணர்வு தான் என்னுள் தோன்றும். ஜாலியாக இருப்பார்கள் எல்லாரும் சேரும் போது. ஆனால் என்ன ஒன்று என்னை மட்டும் அவர்கள் கேங்கில் சேர்க்க மாட்டார்கள் என்று கூறினார்.