மைக் மோகனால் மகளிர் கல்லூரியாக மாறிப்போன மருத்துவமனை… வாழ்ந்தா இப்படில வாழனும்…
1980களில் தமிழின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மோகன். தனது வசீகரமான நடிப்பில் அப்போதைய இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தார் மோகன்.
நடிகர் மோகன் 1977 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த “கோகிலா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “அபரிச்சிதா” என்ற கன்னட படத்திலும், “மடாலாசா” என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்தார்.
அதனை தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு வெளிவந்த “மூடுபனி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மோகன். அதன் பின் “நெஞ்சத்தை கிள்ளாதே”, “கிளிஞ்சல்கள்”, “பயணங்கள் முடிவதில்லை” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த மோகன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வளர்ந்தார்.
மோகன் தற்போது “ஹரா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார் மோகன். இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் மோகன் அக்காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்து வந்ததால் அவருக்கு பெண் ரசிகைகள் மிக அதிகம். அப்போது பல கதாநாயகிகள் கூட மோகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விரும்பினார்களாம். ஆனால் மோகன் யார் வலையிலும் சிக்கவில்லையாம்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் மோகன் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ஒரு முறை மோகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்களாம். அப்போது அவரை நலம் விசாரிப்பதற்காக சித்ரா லட்சுமணன் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்கே மோகன் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் பக்கம் சென்றபோது நாம் மருத்துவமனைக்கு வந்திருக்கிறோமா அல்லது மகளீர் கல்லூரிக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் சித்ரா லட்சுமணனுக்கு ஏற்பட்டுவிட்டதாம். அந்த அளவுக்கு இளம் பெண்கள் மோகனை பார்ப்பதற்காக காத்திருந்தார்களாம்.