விஜய் சேதுபதி சீரிஸை பார்த்து சம்பவம் செய்த புள்ளிங்கோ! – வழக்கு பதிந்த போலீசார்..

by Rajkumar |
விஜய் சேதுபதி சீரிஸை பார்த்து சம்பவம் செய்த புள்ளிங்கோ! – வழக்கு பதிந்த போலீசார்..
X

திரைப்படங்கள் என்பவை ஒரு கற்பனை உலகம் என்றே சொல்லலாம். நிஜ வாழ்க்கையில் இருந்து மாறுப்பட்ட விஷயங்களாகதான் திரைப்படங்கள் இருக்கின்றன. கதை ஓட்டத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பல விஷயங்களை இவற்றில் கையாள்கிறார்கள்.

ஆனால் சிலர் அதில் நடைபெறும் விஷயங்களை நிஜ வாழ்க்கையில் செய்து பார்க்கிறேன் என செய்வதும் உண்டு. மணி ஹையஸ்ட் என்னும் சீரிஸ் வந்தபோது அதில் வரும் பாணியிலேயே கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. தற்சமயம் விஜய் சேதுபதி நடித்த ஃபார்சி சீரிஸை பார்த்து அதே மாதிரியான ஒரு சம்பவத்தை இளைஞர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

புள்ளிங்கோவின் சம்பவம்:

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான வெப் சீரிஸ் ஃபார்சி. கள்ள நோட்டு மாஃபியாவை கதை களமாக கொண்டு இந்த சீரிஸின் கதை செல்கிறது. இதில் போலீசான விஜய் சேதுபதி ஒரு காட்சியில் நாயகனை பிடிப்பதற்கு துரத்துவார்.

Farzi

அப்போது நாயகன் தான் வைத்திருக்கும் கள்ள நோட்டுக்களை சாலையில் கொட்டிவிடுவார். மக்கள் கும்பல் அதை எடுக்க முயற்சிக்கும்போது தப்பித்துவிடுவார். இந்த காட்சியை பார்த்து உத்வேகமடைந்த ஹரியானா இளைஞர்கள் சிலர் நிஜ பணத்தை அந்த சீரிஸில் வருவது போலவே காரில் இருந்து வெளியே வீசியுள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையினர் அந்த இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

Next Story