சிவாஜியின் நடிப்பு இப்படித்தான் இருக்கும்!.. இளம் நடிகர்கள் சொல்வது என்ன தெரியுமா?...

Sivaji
நடிகர் திலகம் சிவாஜியைப் பற்றி இளைய நடிகர்கள் என்னென்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா...
விஜய் சேதுபதி
தமிழ்சினிமாவின் டிக்ஷனரியே அவர் தான். டெக்னாலஜி வளராத அந்தக் காலகட்டத்திலேயே இவரது நடிப்பைப் பார்த்து இன்றைக்கும் பிரமிப்பு அடைகிறோம். பல புதுமைகளைப் படைத்துள்ளார்.

VJS Sivaji
சமீபத்தில் ராஜபார்ட் ரங்கத்துரை, தில்லானா மோகனாம்பாள், கர்ணன் படத்தைப் பார்த்தேன். படத்தில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் நடித்திருக்கிறது. பிரம்மாண்டமான நடிப்புக்குச் சொந்தக்காரர். அவரைப் போல இன்னொரு நடிகர் வர சான்ஸே இல்லை என்கிறார் விஜய் சேதுபதி.
டி.ராஜேந்தர்
தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். குணச்சித்திர பாத்திரங்களில் தன்னைப் பிறவிக்கலைஞராகப் பிரதிபலித்தவர். தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி படம் எடுக்க அவரது பாசமலரே காரணம். அவரது முத்துக்கள் மூன்று படத்திற்கு இசை அமைத்தேன். சிவாஜிக்கு கர்ஜிக்கவும் தெரியும். கருணை காட்டவும் தெரியும்.
கருணாகரன்
நான் படித்தது தஞ்சாவூர். நான் சூரக்கோட்டையைத் தாண்டும் போதெல்லாம் இது தான் சிவாஜி வீடு என என் தாயார் சொல்வார். அவரை சந்திக்க முடியவில்லையே என வருத்தப்பட்டது உண்டு. சில நாள்களுக்கு முன்பு நீங்க நல்லா நடிக்கிறீங்கன்னு பிரபு சொன்னார். அதுவே சிவாஜி பாராட்டியது போல இருந்தது.
ஸ்ரீகாந்த்

Srikanth, Sivaji
சிவாஜியின் நடிப்பைப் பார்த்து சினிமாவில் நடிக்கக் கற்றுக் கொண்டேன். அவர் ஒரு பிறவி நடிகர். அவரைப் போன்ற நடிகர்கள் ஒரு முறை தான் பிறப்பார்கள் என்கிறார் ஸ்ரீகாந்த்.
நடிப்புக்காகப் படைக்கப்பட்டவர் தான் சிவாஜி. அவரது ஒவ்வொரு படமும் வரும் நடிகர்களுக்குப் பெரிய உதாரணம். தலைமுறை தாண்டி நிற்பவர் சிவாஜி என்கிறார் விமல்.
நடிகர்களுக்கே குருவாக இருந்தவர். நடிகன் என்ற முறையில் முதன் முதலாகப் பார்த்தது சிவாஜியைத் தான். பராசக்தி டயலாக்கை ஒரு நடிகன் உச்சரிக்காமல் இருந்தது கிடையாது. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது நமக்குப் பெருமை என்கிறார் நடிகர் விதார்த்.