ஈகைத் திருநாளை அசிங்கப்படுத்திய இர்பான்!.. மனைவி கையை பிடிச்சு இழுத்தாங்களா?.. ரொம்ப மோசம்!..

irfan
Youtuber Irfan: முன்பெல்லாம் திரை பிரபலங்கள் மட்டுமே பெரிதாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது யூட்யூபரை ஆவலாக பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதில் ஒரு சிலரை தவிர சிலர் நடந்துக்கொள்வது பார்ப்பதற்கே கடும் கோபம் வரும் அளவுக்கு அமைந்துள்ளது.
அப்படி ஒரு யூட்யூபர் தான் இர்ஃபான். ஆரம்பத்தில் ஃபுட் ரிவியூ மட்டும் செய்து வந்த இர்பான். தற்போது ரொம்ப பிரபலமாக வலம் வருகிறார். பிரபலங்களுடன் பேட்டி, சுற்றுலா என ஆளே மாறிவிட்டார். வளர வளர அவர் காட்டும் பந்தாக்களும் பரவிக்கொண்டே இருக்கிறது.
அதே சமயத்தில் அவரை தொடர்புப்படுத்தி சர்ச்சைகளும் இறக்கை கட்டி வருகிறது. முதலில் ஒரு ஹோட்டலுக்கு அவர் ரிவியூ செய்த சில தினங்களில் அதில் கெட்ட இறைச்சி இருந்து சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் காரில் ஒரு மூதாட்டி அடிப்பட்டு இறந்தார்.

இதை தொடர்ந்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாலினம் அறியும் சோதனையை சிங்கப்பூரில் செய்து வந்து அதை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆகினார்.
தொடர்ந்து, பிரசவத்தில் தாய் மற்றும் மகளின் தொப்புள் கொடியை கட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு மீண்டும் வாங்கிக்கட்டி கொண்டார். இருந்தும் அப்போதும் அவர் பெரிய அளவில் தண்டனை வாங்காமல் வீடியோ டெலிட் செய்து மன்னிப்புடன் தப்பியதாக கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொரு தவறிலும் சிக்காமல் தப்பி வருகிறார் இர்பான்.
இந்நிலையில் இர்பான் நேற்று ஈகை திருநாளை முன்னிட்டு உதவி செய்ய சென்று இருக்கிறார். இதில் என்ன சர்ச்சை என்று கேட்க தோணுமே? அங்கையும் தன்னுடைய கைவரிசையை காட்டி விட்டார். ஒரு கவரில் கொடுக்கும் உதவியை கார் ஓட்டிக்கொண்டே கொடுக்கிறார்.
அதை வாங்குபவர்கள் கிடைக்காமல் போய் விடுமோ என புடுங்கும் நிலை வருகிறது. இதற்கு அவர் காட்டிய ரியாக்ஷன்களும், மோசமான பிஜிஎம்களுமே தற்போதைய சமூக வலைத்தளத்தின் ஹாட் டாப்பிக்காகி இருக்கிறது. உதவி செய்தால் கீழே இறங்கி செய்ய வேண்டியதுதானே என்ற குரலும் எழுந்துள்ளது.
இதற்கு அந்த வீடியோவின் கீழேயே நான் கோபப்படுவது போல சிலருக்கு தோன்றலாம். அந்த சூழ்நிலையில் அப்படி ஆகிவிட்டது. என்னுடைய தோரணைக்கு சாரி. ஆனால் மனைவி ஆலியா கையில் அடிப்பட்டதால் மட்டுமே மன உளைச்சலில் அப்படி செய்துவிட்டதாக சொல்லி இருக்கிறார். இருந்தும் உதவி யாராச்சும் கார் ஓட்டிக்கிட்டே கொடுப்பாங்களா பாஸ் எனவும் கடுப்படித்து வருகின்றனர்.
மேலும், காரில் போன் பேசியதாக யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டது போல கார் ஓட்டிக்கொண்டே இர்பான் இப்படி செய்வது சரியாக இருக்கா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. ஆனால் இதுலையும் இவர் தப்பிக்க தானே போறார் எனவும் பேச்சுக்கள் இருக்கிறது.