வசமாக சிக்கிக் கொண்ட இர்ஃபான்! - போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

by Rohini |
irfan
X

irfan

நேற்று பிரபல யூட்யூபர் இர்பானில் கார் ஒரு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யூடியூபில் பலவகையான ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை ருசித்து அதை தனது சேனல் மூலமாக மக்களுக்கு தொகுத்து வழங்கிய யூடியூபர் தான் இந்த இர்பான்.

அதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இங்கு மட்டும் அல்லாமல் பல வெளிமாநிலங்களுக்கும் சென்று அங்குள்ள உணவுகளை ருசித்து அதையும் தனது சேனல் மூலமாக தொகுத்து வழங்கி வந்தவர்.

irfan1

irfan1

மேலும் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் அவ்வப்போது சந்தித்து அவர்களுடன் உரையாடி அதையும் தனது சேனலில் பதிவிட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார் இர்ஃபான். கடந்த 14ஆம் தேதி தான் இர்ஃபானுக்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று அவருடைய கார் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஒரு ஊரில் பயங்கர விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் ஒரு மூதாட்டி மரணமடைந்ததும் தெரிய வந்தது. 55 வயது மதிக்கத்தக்க அந்த மூதாட்டியின் பெயர் பத்மாவதி என்றும் அந்த விபத்தில் சிக்கி அவர் மரணம் அடைந்து விட்டார் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

irfan2

irfan2

மேலும் இர்ஃபானின் காரை அவருடைய டிரைவர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும் அவர்தான் இந்த விபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகையில் இன்று ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. முதலில் இந்தக் காரில் இர்பான் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று நடத்திய விசாரணையில் அந்த காரில் இர்பான் பயணம் செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து தனது விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story