உலகத்திலேயே 'காஸ்ட்லி' இறைச்சி... ரொம்ப பொங்காதீங்க!.. கடுப்பில் ரசிகர்கள்!

by சிவா |   ( Updated:2024-11-21 00:51:17  )
irfan
X

#image_title

Irfan Review: யூடியூபர் இர்பான் தொடர் சர்ச்சைகளில் அவ்வப்போது அடிபடுபவர். ஆரம்பத்தில் வேறு வேலை செய்து வந்த இர்பான் யூடியூப் சேனல் தொடங்கினார். உணவு குறித்த இவரது வீடியோக்கள் ஒன்றிரண்டு வைரலாக தற்போது முழுநேர யூடியூபராக மாறி மாசம் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு இவருடைய கார் இடித்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் அறிவித்தது. குழந்தை பிறந்தபோது அதற்கு தொப்புள்கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டது என ஏகப்பட்ட சர்ச்சைகள் இவர்மீது உள்ளன.

இதையும் படிங்க: நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்குதான்னு இருந்தா!… மீம்ஸால் கடுப்பான விக்கி!…

இவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது அதுகுறித்து வாயே திறப்பதில்லை. இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் தமிழக அரசினை டேக் செய்து வருகின்றனர். ஆனால் அவருக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இர்பான் துணை முதல்வர் உதயநிதிக்கு நெருக்கமாக இருப்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் தட்டி கழிப்பதாக கூறப்படுகிறது.

irfan

#image_title

இந்தநிலையில் உலகின் விலைமிகுந்த மாட்டிறைச்சியை சாப்பிட்டு இர்பான் என்ஜாய் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. 100 கிராம் மாட்டிறைச்சி ரூபாய் 14 ஆயிரமாம். இந்த உணவினை சாப்பிட்டு தன்னுடைய பாணியில் அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் நெப்போலியன் மகன் திருமணத்தில் இர்பான் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. சாப்பாடு, கல்யாணம், வீடியோ என்று வாழ்க்கையை மனிதன் வாழ்ந்து வருகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கடுப்பில் கன்னாபின்னாவென திட்டி தீர்த்து வருகின்றனர்.

Next Story