மாவீரன் திரைப்படத்தில் பிரபல யூட்யூபர்?... இவரும் சினிமாவுக்குள்ள வந்துட்டாரா?
சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இல்லாமல் போனது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். எனினும் சில நாட்களிலேயே அவர்களது சோகத்தை மறக்கடிக்கும்படியான ஒரு செய்தி வெளிவந்தது.
மண்டேலா
“மண்டேலா” என்ற தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படத்தை இயக்கிய மடோன்னே அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்க்கவுள்ளார் என்ற செய்திதான் அது. “மண்டேலா” திரைப்படம் சென்ற ஆண்டின் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கின் இத்திரைப்படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில், சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்த செய்திகளை இயக்குனர் மடோன்னே அஸ்வின் மறுத்திருந்தார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது.
மாவீரன் படத்தில் பிரபல யூட்யூபர்
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான யூட்யூப் பிரபலம் நடித்துள்ளார் என்று இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது பிரபல யூட்யூபரான மதன் கௌரி சிவகார்த்திகேயனுடன் இணைந்து எடுத்த ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “With Maaveeran SK Anna!” என குறிப்பிட்டுள்ளார். பலருக்கும் மதன் கௌரி “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளாரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
ஆனால் உண்மை என்னவென்றால், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை சிவகார்த்திகேயன் காண வந்திருக்கிறார். அப்போது மதன் கௌரி அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. ஆதலால் மதன் கௌரி இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பதுதான் உண்மை.