kanguva
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று 10-க்கும் ஏற்பட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பீரியட் படமாக உருவாகியிருந்தது. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இதையும் படிங்க: Kanguva: சூர்யாதான் காரணம்!. சிவா லைவ் காலி!.. செகண்ட் பார்ட் வாய்ப்பே இல்ல!.. சீறும் பிரபலம்!..
கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யா எந்த திரைப்படத்திலும் கமிட்டாகாமல் இப்படத்திற்காகவே தனது முழு உழைப்பையும் போட்டு நடித்திருந்தார். ஆனால் படம் அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருக்கும் சூர்யா ரசிகர்களும் இந்த திரைப்படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்களை தான் அதிக அளவில் கொடுத்து வருகிறார்கள். சோசியல் மீடியாக்களை திறந்தாலே கங்குவா திரைப்படம் குறித்த ட்ரோல், மீம்ஸ் போன்றவை தான் குவிந்து வருகின்றது. படக்குழுவினர் ப்ரோமோஷன் என்கின்ற பெயரில் பில்டப் கொடுக்காமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை.
ரசிகர்கள் படத்தை சரி இல்லை என்று கூறிவிட்டு போய்விடுவார்கள். ஆனால் சூர்யா தொடங்கி ஞானவேல் ராஜா வரை ஒவ்வொருவரும் படத்திற்கு கொடுத்த ஹைப் தான் ரசிகர்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிலும் சினிமா விமர்சகர்கள் நேற்று முதல் இந்த திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் படத்தில் இருக்கும் நெகட்டிவ் குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் கங்குவா திரைப்படத்தை டார்டராக கிழித்து தொங்கவிட்டு வருகின்றார். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களைத் தாண்டி தேவி ஸ்ரீ பிரசாந்த் அதிக அளவிற்கு விமர்சனத்தை பெற்றிருக்கின்றார். காரணம் இப்படத்திற்கு அவர் இசை என்கின்ற பெயரில் படம் முழுக்க இரைச்சலை ஏற்படுத்தி இருக்கின்றார் என்பது பலரது கருத்தாக இருக்கின்றது.
இந்நிலையில் பிரபல யூட்யூபர் மாரிதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கங்குவா திரைப்படம் குறித்து ஒரு விமர்சனத்தை பகிர்ந்து இருக்கின்றார். ‘ஒரு படம் பார்க்க போய் மன அழுத்தம் ஏற்பட்டு டிப்ரஷன் மூடுக்கு தள்ளி சினிமா ரசிகர்கள் கோபமானதாக ஒரே ஒரு திரைப்படம் இருக்கும் என்றால் அது கங்குவா தான்..
இதையும் படிங்க: கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கலாய்த்த நடிகர்… அவரு சொல்றதுல என்ன தப்பு?
எல்லாரும் சொல்லும் முதல் விஷயம் ‘கத்திகிட்டே இருக்கானுங்க.. படமா இது’? இப்படி அசிங்க அசிங்கமா ஒரு படத்தை திட்டி நான் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு மனம் அழுத்தம் ஏற்படுத்தி இருக்காங்க. மனநலம் கருதி இப்படத்தை தவிர்ப்பது நல்லது’ என்று கூறி இருக்கின்றார். அரசியல் விமர்சகரையே இப்படி கருத்து சொல்ல வச்சிட்டீங்களே என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கங்குவா படக்குழுவினரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…