என் படத்தில் அவரா?...நினைத்து கூட பார்க்கவில்லை.. கோமாளி பட இயக்குனர் நெகிழ்ச்சி...
கோமாளி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம் ரசிகர்களை கவர்ந்து மெஜா ஹிட் அடித்தது. ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படத்தை விட இப்படம் அதிகமாக கல்லா கட்டியது.
இப்படத்திற்கு பின் வேறு ஹீரோ யாராயைவது வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்த்தால் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பிரதீப் ‘நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த காலத்தில் பையா படத்தின் பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்த போது இந்த் லெஜண்ட்டுடன் வேலை செய்வேன் என நான் நினைத்தேனா?.. வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்’ என பதிவிட்டுள்ளார்.