இதனால் யுவன் இசையை தவிர்த்தார்களா? வெடிக்கும் வலிமை பிஜிஎம் பிரச்சனை....!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். அவரது இசைக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. அந்த அளவிற்கு இவரது பாடல்கள் பிரபலமாகி உள்ளன. என்றே வாமனன் படத்திற்கு யுவன் இசையமைத்த இதயமே பாடல் தற்போது வரை இன்ஸ்டாகிரம் ரீல்ஸில் டிரண்டாகி வருகிறது.
இப்படிப்பட்ட யுவன் பிஜிஎம் வலிமை படத்தில் பயன்படுத்தாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக வலிமை படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார் என்ற செய்தி கேட்டதும் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். யுவன் இசை என்றால் நிச்சயம் பாடல்கள் வெற்றி பெறும் பிஜிஎம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்த்தார்கள்.

vinoth
ஆனால் சமீபத்தில் வலிமை படத்திற்கு யுவன் பிஜிஎம் அமைக்கவில்லை இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் பிஜிஎம் இசையமைத்துள்ளார் என படத்தின் இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதை கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
அதன்படி படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத் ஆகிய இருவருக்கும் இசையமைப்பாளர் யுவன் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம். அதன் காரணமாக தான் அவரின் இசையை பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்தி கொண்டு பிஜிஎம்க்கு ஜிப்ரானின் இசையை பயன்படுத்தி உள்ளார்களாம்.

jibran music director
மேலும் யுவன் அமைத்த பிஜிஎம் இயக்குனர் வினோத்திற்கு பிடிக்கவில்லையாம். அதனால் தான் அவர் ஜிப்ரானிடம் பிஜிஎம் அமைக்க கூறினாராம். ஆனால் பேட்டியில் யுவன் சரியாக ஒத்துழைக்கவில்லை என வினோத் கூறியிருந்தார். ஒட்டுமொத்த ரசிகர்களும் ரசிக்கும் யுவன் இசையை வினோத் பிடிக்கவில்லை என கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.