யுவன் இல்லனா என்ன? அவருக்கு நான் எவ்வளோ செஞ்சிருக்கேன் தெரியுமா? ஓபனாக பேசிய ஆர்.கே.சுரேஷ்!...
Yuvan vs RK Suresh: கோலிவுட்டில் ஒவ்வொரு டைமும் இரு பிரபலங்களுக்குள் நடக்கும் சர்ச்சை என்பது தொடர்கதையாகி விட்டது. தற்போது அந்த இடத்தில் இருப்பவர்கள் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தான்.
சமீபத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் தென்மாவட்டம் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் மியூசிக் யுவன் ஷங்கர் ராஜா எனப் போட்டு இருந்தது. அந்த போஸ்டரை ஷேர் செய்து யுவன் நான் இந்த படத்திற்கு இசையமைப்பு செய்யவில்லை. இந்த படம் குறித்து என்னை வந்து யாரும் சந்திக்கவே இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மனைவி உயிருக்கு போராட 15 லட்சம் கொடுத்து உதவிய ரஜினி! ‘லால் சலாம்’ பட நடிகர் கண்ணீர் மல்க பேட்டி
அதற்கு பதில் அளித்த ஆர்.கே.சுரேஷ், இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தீர்கள். ஆனால் இப்போ கான்செர்ட்டிலே வாழ்கிறீர்கள். அக்ரிமெண்ட்டை செக் செய்யுங்க எனப் பதிலடி கொடுத்து இருப்பார். இந்த பிரச்னை சர்ச்சையான நிலையில் தற்போது ஆர்.கே.சுரேஷ் பேட்டி கொடுத்து இருக்கிறார்.
ஆர்.கே.சுரேஷ் பேட்டியில் இருந்து, யுவன் ஷங்கர் ராஜா எனக்கு ஒரு படத்துக்கு இசையமைப்பு செய்ய பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. அது ஏன் தென்மாவட்டம் படமாக இருக்க கூடாது. யுவன் செய்யவில்லை என்றால் நாங்கள் இமானை புக் செய்து கொள்கிறோம். அவர் மார்க்கெட் இழந்து இருந்தார். அப்போ அவருக்கு இரண்டாம் இன்னிங்ஸாக தர்மதுரை படத்தினை கொடுத்தது நான் தான். மாமனிதன் படத்தின் ரிலீஸுக்கும் உதவி செய்தேன்.
இந்த பிரச்னையை நான் சட்ட ரீதியாக கொண்டு செல்ல இருக்கேன். யுவன் டீம் பேசுவதாக சொல்லி இருக்காங்க. அவரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என நம்புவதாக தெரிவித்து இருப்பார். இதை தொடர்ந்து ரசிகர்கள் என்ன யுவனையே மிரட்டுறீங்களா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இனிமேல் யுவன் தரப்பு இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: மீனாவுக்கு கிடைத்த பலே ஆஃபர்!… இனிமே முத்து ஆட்டம் வேற லெவலில் இருக்க போகுதுப்பா…