விஜய்க்கு மட்டும் இசையமைக்காத யுவன்... காரணம் என்ன?

தமிழ் சினிமாவை பொருத்தவரை இசை என்றாலே அது இசைஞானி இளையராஜா தான். இவரின் இசைக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. ஆனால் இதெல்லாம் 80 மற்றும் 90களில் தான். தற்போது இளையராஜாவின் பொறுப்பை அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா ஏற்று கொண்டார்.
இன்றைய இளைஞர்கள் யுவனின் பாடல்களை தான் பெரும்பாலும் ரசித்து வருகிறார்கள். காதல் தோல்வி, நட்பு, மோட்டிவேசன் என அனைத்து விதமான உணர்வுகளுக்கும் யுவன் பாடல்கள் மருந்தாக அமைவதால் இளைஞர்களின் பேவரைட் இசையமைப்பாளராகவே யுவன் மாறிவிட்டார்.
யுவன் அனைத்து நடிகர்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் பெரும்பாலான அஜித் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வரிசையில் பில்லா, மங்காத்தா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஆனால் இதுவரை விஜய் படத்திற்கு மட்டும் யுவன் இசையமைக்காதது தான் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. யுவன் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே விஜய் படத்திற்கு இசையமைத்து உள்ளார். அதுவும் 2003ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதியகீதை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே யுவன் இசை அமைத்தார்.
அதன் பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணையும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இருப்பினும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜய் படத்திற்கு இசையமைப்பேன் என யுவன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அந்த வாய்ப்பு எப்போது வரும் என்று தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.