அப்பாவ மிஞ்சிய புள்ள! பாட்டு வேணும்னா இங்க வரனும் – யுவன் சங்கர் ராஜாவால் ‘தளபதி 68’க்கு வந்த சிக்கல்

Published on: December 13, 2023
vijay
---Advertisement---

Yuvan Sankar Raja: மெலடி மன்னன், காதல் பாடல்களை இசைப்பதில் வல்லவர் என சொல்லலாம். இசை ஜாம்பவானின் வாரிசு என்றால் சும்மாவா? ஒரு பக்கம் இளையராஜா இசையை கேட்டு இன்று வரை ரசித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

அதே போல் ஏராளமான இளைஞர்களின் மனதில் ஒலிக்கும் பாடல்கள் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அமைந்த பாடல்களாகவே இருக்கும். அந்தளவு மனதுக்கு இதமான பல காதல் பாடல்களை மக்களுக்காக கொடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இதையும் படிங்க: தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

அனிருத்தின் வளர்ச்சி ஒரு விதத்தில் யுவன் சங்கர் ராஜாவை மட்டுமில்லாமல் இமான், ஹரீஸ் ஜெயராஜ் போன்றவர்களின் வாய்ப்புகளையும் குறைத்தது. பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பது அனிருத்தாகவேதான் இருக்கிறார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசைமைக்கிறார். நீண்ட நாள்களுக்கு பிறகு விஜயின் படத்திற்கு இசையமைப்பதால் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: இனிமே பிரியாணி கிடையாது! அஜித் எடுத்த திடீர் முடிவு – என்னக் காரணம் தெரியுமா?

இந்த  நிலையில் யுவன் சங்கர் ராஜாவை பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே தான் இசையமைக்கும் படங்களுக்கு அவ்வளவு எளிதாக பாடல்களை கொடுக்க மாட்டார் என அவர் மீது ஒரு அதிருப்தி இருந்து வந்தது.

இதில் கூடுதலாக அவர் துபாயிலேயே செட்டிலாகிவிட்டாராம். அவரது மாமனார் ஒரு பெரிய் தொழிலதிபராம். அதனால் மனைவியுடன் அங்கேயே தங்கிவிட்டாராம். படம் சம்பந்தமாக ஸ்கைப்பிலேயே தான் பேசி வருகிறாராம். ரீ ரிக்கார்டிங் கூட ஆன் லைனிலேயே அனுப்பி விடுகிறாராம்.

சில சமயம் ஒரு சில இயக்குனர்கள் ரீ ரிக்கார்டிக்கிற்காக துபாய்க்கே செல்ல வேண்டியிருக்கிறதாம். அங்கேயே ரிக்கார்டிங்கையே முடித்து கொடுத்தனுப்புகிறாராம் யுவன். இது மற்ற படங்களுக்கு சரி. ஆனால் கோலிவுட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தில் இருக்கும் விஜய் படத்திற்கு எப்படி சாத்தியமாகும் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: ஆண்கள் தினம்னா இதுதான் மீம்ஸ்!.. கவுண்டமணியோட இந்த காட்சி உருவானது எப்படி தெரியுமா?…

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.