Cinema News
நம்ம ஆடுற ஆட்டத்திற்கு இதெல்லாம் தேவைதானா.?! யுவனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
இயக்குனர் சுந்தர்.சி தற்போது நடிகர் ஜெய், ஜீவா, மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்தின் சூட்டிங் ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். வின்னர் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து சுந்தர்.சியும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – விஜயை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சூர்யா.! இருந்தாலும் மெர்சல் அளவுக்கு வர முடியாது.!
தற்போது படக்குழுவினருடன் யுவன் சங்கர் ராஜா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த போட்டோவில் ஒரு பாடல் காட்சி சூட்டிங் என தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆம்பள திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கடைசியாக ஒரு பாடல் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் வருவார். அதுபோல யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலுக்கு வருகிறார் என கூறி வருகின்றனர்.
பொதுவாக யுவன்சங்கர்ராஜா அவ்வளவாக நடன அசைவுகளை செய்யமாட்டார். அப்படி இருக்கையில் ஒரு பாடல் காட்சியில் எப்படி யுவன் ஷங்கர் ராஜாவை சுந்தர் சி காட்டப் போகிறார் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். விரைவில் அந்த படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.