ரஜினிகாந்த்துடன் இணையும் Come Back இசையமைப்பாளர்… டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்ட் வைக்குறாங்களே!!

Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். நெல்சன் இதற்கு முன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. எனினும் தற்போது நெல்சன் இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Jailer
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பல நாட்களுக்கு முன் வெளிவந்தது. எனினும் சிபி சக்ரவர்த்தி கூறிய கதை ரஜினிக்கு திருப்தியை அளிக்கவில்லையாம். எனினும் சிபி சக்ரவர்த்திக்கு ரஜினிகாந்த் எந்த முடிவையும் கூறவில்லை என தகவல் வெளிவருகிறது.
இந்த நிலையில் லண்டனில் லைகா நிறுவனம் நடத்தும் பிரம்மாண்டமான கிறுஸ்துமஸ் விழாவில் “லவ் டூடே” இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் கலந்துகொண்டு வருகிறார் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதீப் ரங்கநாதன் ரஜினிக்காக ஒரு கதை வைத்திருக்கிறாராம்.

Rajinikanth and Pradeep Ranganathan
அந்த கதையை லைகா நிறுவனத்திடம் கூறுவதற்காகத்தான் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கதை லைகா நிறுவனத்திற்கு பிடித்துப்போக ரஜினியிடம் பேச்சு வார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கிறதாம். ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ஓரளவு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்த படத்தை விஷால்தான் இயக்கினாரா?!.. இவ்வளவு நாள் இதை மறைச்சிருக்காரே!..

Yuvan
இதனை தொடர்ந்து மற்றும் ஒரு ஆச்சரியத்தக்க தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பிரதீப் ரங்கநாதன் ரஜினியை வைத்து இயக்கும் திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இதற்கு முன் ரஜினிகாந்த்தின் எந்த திரைப்படத்திற்கும் இசையமைத்ததில்லை. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ரஜினிகாந்த்துடன் கைக்கோர்க்கவுள்ளாராம் யுவன்.