யுவன் இசையமைத்த செமத்தியான பாடல்… பட்டி டிங்கரிங் செய்து ஹிட் அடித்த ஜி.வி.பிரகாஷ்… இது தெரியாம போச்சே!!
2010 ஆம் ஆண்டு கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோரின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இத்திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்களிடையே சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு இத்திரைப்படத்தை கொண்டாடத் தொடங்கினர்.
மேலும் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. எனினும் இத்திரைப்படம் குறித்தான எந்த அப்டேட்டும் சமீபத்தில் வெளிவரவில்லை.
கார்த்தி நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பதாக இருந்தது. மேலும் ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சில காரணங்களால் யுவன் ஷங்கர் ராஜா அத்திரைப்படத்தில் இருந்து விலகினார்.
அதற்கு பிறகுதான் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒப்புக்கொண்டார். அப்போது யுவன் ஏற்கனவே பதிவு செய்திருந்த பாடலின் மெட்டை பயன்படுத்தி இன்னொரு பாடலை உருவாக்கினார் ஜி.வி.பிரகாஷ். அப்பாடல்தான் “உன் மேல ஆசைதான்” என்ற பாடல். இப்பாடலை தனுஷ் பாடியிருந்தார். மேலும் இப்பாடல் வெளிவந்த சமயத்தில் வேற லெவல் ஹிட் ஆன பாடலாக அமைந்தது.
யுவன் ஷங்கர் ராஜா, “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்காக முதலில் போட்ட மெட்டை வைத்துத்தான் “சர்வம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அடடா வா அசத்தலாம்” என்ற பாடலை உருவாக்கினார். இப்பாடலை இளையராஜா பாடியிருந்தார். இவ்வாறு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மெட்டை வைத்து ஒரு ஹிட் பாடலை உருவாக்கியிருக்கிறார் ஜி.வி.பிராகாஷ்.