அன்னைக்கு அபர்னதி இன்னைக்கி பிரியா பவானி சங்கரா..? நயன்தாரா ரூட்டை கையில் எடுக்கும் நடிகைகள்!..

by ramya suresh |
actress
X

actress

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்றும் அதற்கு தனி பேமெண்ட் வேண்டும் என்று நயன்தாரா பாணியில் கேட்க தொடங்கி இருக்கிறார்கள்.

பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகும் போது அதற்கு ஆடியோ லான்ச் மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வைப்பது சகஜம் தான். சிறு படங்கள் தொடங்கி பெரிய படங்கள் வரை அனைவரும் தங்களது படங்களை ப்ரமோஷன் செய்து வருகிறார்கள். இதில் ஹீரோ, வில்லன், கதாநாயகி என அனைவரும் கலந்து கொண்டு படம் குறித்து ப்ரோமோஷன் செய்வார்கள்.

இதையும் படிங்க: Keerthy Suresh: என்ன ஒரு ரொமான்டிக் pic? காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகை நயன்தாரா எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். நடிகர் ரஜினிகாந்த் இந்த வயதிலும் தனது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்து கொண்டு வரும் நிலையில் லேடிஸ் சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தனது தயாரிப்பு படங்களை தவிர மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் எப்போதும் ப்ரோமோஷனுக்கு சென்றதே இல்லை.

படம் குறித்து அக்ரீமெண்ட் போடும்போதே இந்த கண்டிஷனை தெளிவாக கூறி விடுவாராம் நடிகை நயன்தாரா. இந்த ரூட்டை தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில நடிகைகள் பின்பற்றி வருவதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்தியதேவ், சத்யராஜ், ப்ரியா பவானிசாகர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீப்ரா.

இந்த திரைப்படம் வெளியாகி பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படம் முதல் வாரத்தில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அடுத்த அடுத்த வாரங்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிரியா பவானி சங்கர் வராததை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.

zebra movie

zebra movie

அதில் அவர் கூறி இருந்ததாவது வெளிநாட்டில் இருக்கும் ப்ரியா பவானி சங்கரை டிக்கெட் போட்டு இந்த நிகழ்ச்சிக்கு அவரை மட்டும் அழைத்து வர முடியாது. அவரது டீமையே அழைக்க வேண்டும், அதற்கு 25 லட்சம் செலவாகும். மேலும் இந்த தொகுப்பாளர் தான் தன்னை கேள்வி கேட்க வேண்டும். இந்த youtube சேனலுக்கு தான் பேட்டி கொடுப்பேன் என்றெல்லாம் டிமாண்ட் வைப்பார்கள்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு என்று அவரை அழைத்தால் ஏற்படும் செலவுக்கு பதில் அந்த பணத்தை நான் ப்ரோமோஷனுக்காக செலவழித்து விடுவேன் என்று தயாரிப்பாளர் மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். இது மட்டுமில்லாமல் கடந்து சில தினங்களுக்கு முன்பு நாற்கரப்போர் என்கின்ற படத்தில் நடித்திருந்த அபர்னதி அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

இதையும் படிங்க: Jyothika: கை கொடுக்க ஓடி வந்த ரசிகை.. ஜோதிகாவின் ரியாக்‌ஷன்! திருப்பதியில் நடந்த சம்பவம்

மேலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தால் சில கண்டிஷன்கள் இருக்கின்றது. 3 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கேட்டதாக மேடையிலேயே தயாரிப்பாளர் பேசியிருந்தார். இப்படி தொடர்ந்து நடிகைகள் தங்களது படங்களின் ப்ரோமோஷன் மற்றும் ஆடியோ லான்ச் விழாவிற்கு வருவதற்கு இப்படி தனியாக பணம் கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்கள்.

Next Story