அடுத்தடுத்து சர்ப்பரைஸ்... நானே வருவேன் புதிய போஸ்டர் வெளியீடு...
by சிவா |
X
பல வருடங்களுக்கு பின் நடிகர் தனுஷும், அவரது அண்ணன் செல்வராகவனும் நானே வருவேன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்ததால் நானே வருவேன் படம் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 16ம் தேதி துவங்கியது. அன்று இப்படம் தொடர்பான 2 போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. இடைவெளி இல்லமால் படு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க செல்வராகவனும் தனுஷும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு புதிய போஸ்டரை தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்பரைஸ் விருந்தாக அமைந்துள்ளது.
Next Story