இதயமே நொறுங்கிடுச்சு... காதலுடன் ரொமான்ஸில் மூழ்கிய பூனம் பாஜ்வா!
பூனம் பாஜ்வா வெளியிட்ட லவ் ரொமான்டிக் புகைப்படங்கள்!
அறிமுகமான புதிதிலே ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் பூனம் பாஜ்வா. இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பின்னர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்து வாய்ப்பு தேட துவங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அதுவும் அவருக்கு கிட்டவில்லை.
இதையும் படியுங்கள்: கமல் ஹாசனின் உடல் நிலை குறித்து மக்கள் நீதி மையம் கட்சி அதிகாரபூர்வ டுவீட்
இந்நிலையில் தற்போது தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் ஜாலியாக அவுட்டிங் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் இதயத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டார். இருந்தும் அவரின் சிரிப்பு அழகையும், கவர்ச்சியை கண்டு கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.