இன்று தனது திருமண நாளில் சமந்தா போட்ட பதிவு - போன வருஷம் என்ன பதிவிட்டார் தெரியுமா?

by பிரஜன் |   ( Updated:2021-10-07 09:39:45  )
samantha
X

samantha

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் காதலித்தது கடந்த 2017ல் திருமணம் செய்துக்கொண்டனர். 5 வருடம் முடிவதற்குள் அவர்களது திருமண உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஆம் அண்மையில் தான் இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டதாக அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 7)ல் தனது திருமணநாளில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். மிகவும் சோர்ந்துப்போன தேவதை போன்று நின்றிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி என கவலையான விஷயங்களை கூறியுள்ளார்.

சென்ற வருடம் இதே நாளில் கடந்த வருடம் இதே நாளில் சமந்தா, நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கனவா என்று பதிவிட்டு இருந்ததது குறிப்பிடத்தக்கது. .

Next Story