இப்ப சர்ப்போர்ட் செய்யுராங்க...ஆனால் பொங்கலுக்கு பாருங்க....
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். அமேசான் பிரைமில் வெளியான இந்த படம் கிகப்பெரிய்ட வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் பலராலும் பாராட்டப்பட்டது.
இப்படத்தில் இடம் பெற்ற காவல் ஆய்வாளரின் பெயர் ஒரு குறிப்பிட்ட சாதியை குறிப்பதாகவும், இப்படத்தின் ஒரு காட்சியில் அந்த காவல் ஆய்வாளரின் வீட்டில் வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைக்கப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சூர்யாவிடம் விளக்கம் கேட்டு அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யாவும் பதிலளித்தார். ஆனால் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
இந்த பிரச்சனையில் சூர்யாவிற்கு ஆதரவாக திரையுலகில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக அஜித் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த ஆதரவு சில நாட்களுக்கு மட்டுமே என்பதுதான் உண்மை. காரணம் சூர்யாவின் எதற்க்கும் துணிந்தவன்தான்.
அஜித் நடித்த வலிமை பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதே நாள்தான் சூர்யா நடித்த பாண்டியராஜ் இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன் படமும் வெளியாக உள்ளது. இன்று ஆதரவு செய்கிறார்கள், ஆனால் பொங்கல் அன்று அஜித் ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.