இப்படி பண்ணியே எங்கள மயக்கிட்ட!... பிரியா பவானி சங்கரின் நச் கிளிக்ஸ்...

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பிரியா பவானி சங்கர். அப்போதே அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். எனவே, சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின், மேயாதமான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் அழகு ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகினரையும் கட்டி போட்டது. எனவே, தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.