இவ்ளோ வெயிட்டா? கட்டிக்கப்போற பையன் ரொம்ப பாவம்.... கேலி செய்ததால் கடுப்பான நடிகை....!

by ராம் சுதன் |   ( Updated:2022-04-27 08:24:43  )
இவ்ளோ வெயிட்டா? கட்டிக்கப்போற பையன் ரொம்ப பாவம்.... கேலி செய்ததால் கடுப்பான நடிகை....!
X

சமீபகாலமாகவே பிரபலங்கள் மீதான பாடி ஷேமிங் அதாவது உருவகேலி என்பது அளவுக்கு அதிகமாக உள்ளது. நடிகர் நடிகை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் நெட்டிசன்கள் உருவகேலி செய்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் நடிகர் அஜித் கூட சமீபத்தில் உருவகேலிக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

manjima mohan

இப்படி உள்ள நிலையில் இளம் நடிகை ஒருவர் அடுத்தடுத்து தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகி வருவதால் மிகவும் வேதனையில் உள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை மஞ்சிமா மோகன் தான்.

அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மஞ்சிமா மோகன் இறுதியாக தமிழில் எப்ஐஆர் படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென உடல் எடை அதிகரித்ததால் சமீபகாலமாகவே மஞ்சிமா உருவ கேலிக்கு ஆளாகி வருகிறார்.

manjima mohan

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் "ஓவர் வெயிட். பாவம் அந்த பையன்" என கூறியுள்ளார். இதனால் கடுப்பான மஞ்சிமா, "எனது எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அக்கறைக் கொண்ட ஒரு நபர்" என அவரை கிண்டல் செய்யும் விதமாக பதிலளித்துள்ளார்.

tweet

அதேபோல் "நீங்கள் shape வாருங்கள். இல்லையென்றால் சினிமாவில் இருந்து விரைவில் மறைந்து விடுவீர்கள்" என கூறிய மற்றொரு நபருக்கு "சினிமா இண்டஸ்ட்ரி வெறும் புற அழகை மட்டுமே கொண்டு வாய்ப்புத் தரும் என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் தகவலுக்கு நன்றி" என மஞ்சிமா பதிலளித்துள்ளார்.

tweet

Next Story