எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆசையாக போன நடிகை...! கடைசில அப்படி சொல்லிட்டாரே புரட்சிதலைவர்....!
சினிமாவிலும் அரசியலிலும் தன் அன்பால் ஆதிக்கத்தை நடத்தியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பல வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்று விளங்கினார். தான் நடிக்கும் எல்லா படங்களிலும் உறவுகளின் முக்கியத்துவத்தை கருத்துக்கள் வாயிலாக எடுத்துக் கூறுவார்.
மேலும் நல்லது கெட்டதுகளை பாடல்களின் மூலம் வெளிப்படுத்துவார். இதன் காரணமாகவே அரசியலிலும் மக்கள் பலத்தை பெற முடிந்தது. எந்த நடிகைகளுக்கும் இருக்கிற ஆசை ஒன்று தான் பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது. அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யாவுக்கும் வந்திருக்கிறது.
ஸ்ரீவித்யாவரை சினிமா அழைத்தது அவரது 16 வயதில். கொஞ்சம் யோசித்தவர் எம்.ஜி.ஆருடன் ரகசிய போலீஸ் 115 படத்தில் உனக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. மேக்கப் டெஸ்ட் எடுக்க வேண்டும் என அழைத்துக் கொண்டு போனார்களாம். அங்கு ஒரு சேலையை கொடுத்து கட்ட வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்கள் : ஒட்டுமொத்த கோலிவுட் நடிகைகளுக்கும் கள்வனாக இருந்த ஒரே நடிகர்…! அதில் மூன்று நடிகைகள் மட்டும் விதிவிலக்கு…
எம்.ஜி.ஆர் வந்து பார்த்து விசாரிக்க அடடே மிகவும் சின்ன பொண்ணாக இருக்கிறதே..சரி வராது என கூறிவிட்டாராம் எம்,ஜி.ஆர். அதன் பிறகே அந்த கதாபாத்திரத்தில் நடிகை வெண்ணிறாடை நிர்மலா நடித்திருக்கிறார். முதலில் யோசித்த ஸ்ரீவித்யா எம்.ஜி.ஆர்னு சொன்னதும் ஆசையாக சென்று கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்.