எம்புரான் படத்திற்கு எதிர்ப்பு!.. பல காட்சிகள் கட்!.. விரைவில் வெளியாகும் புதிய வெர்ஷன்!….

empuraan
Empuraan: பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம்தான் எம்புரான். 2019ம் வருடம் வெளியான லூசிபர் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியிருக்கிறது. முதல் பாகம் போலவே அரசியல் திரில்லர் ஆக்சன் படமாக எம்புரான் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், பிருத்திவிராஜ், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளும் அதிக அளவில் விற்கப்பட்டது. அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி படத்தின் முன்பதிவை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட்டுகள் விற்பனை ஆனது. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் மோகன்லாலுக்கு மாஸான வேடம் கொடுக்கப்பட்டிருந்தாது.
ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அவர் என்ன கடவுளா?.. கேங்ஸ்டரா?.. பெரிய பணக்காரரா? என எதுவும் புரியவில்லை. ஆனால், தமிழகத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்திய அளவில் இந்த படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. வெளிநாட்டிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் படம் பார்க்கிறார்கள்.

இதன் காரணமாக 2 நாட்களிலேயே இப்படம் உலகமெங்கும் 100 கோடி வசூலை இப்படம் பெற்றது. இந்தியாவில் மட்டும் இப்படம் 45 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் குஜராத் கலவரத்தில் நடந்த சம்பவங்களை தழுவி சில காட்சிகளை எடுத்திருக்கிறார் பிரித்திவிராஜ். படத்தின் துவக்க காட்சியிலேயே புல்டவுசரை வைத்து முஸ்லீம் வீட்டை இடிப்பது போல காட்டியிருந்தார். இதை எங்கே யார் செய்கிறார்கள் என்பது இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
அதோடு, நடப்பு அரசியலையும் இப்படத்தில் காட்டியிருந்தார்கள். ஒருபக்கம் பராட்டுக்கள் கிடைத்தாலும் இது பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்துக்களை மோசமாக விமர்சித்திருக்கிறார்கள் என ஒரு குரூப் கிளம்பி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்கியோ அல்லது திருத்தம் செய்யவோ படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. மேலும், குறிப்பிட்ட சில வார்த்தைகளை மியூட் செய்துவிட்டு, அதை சென்சார் செய்து ஏப்ரல் 2 முதல் புதிய வெர்ஷனை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.