கல்கி பார்ட் 2-க்கு இத்தனை வருஷமா?... அப்படி என்னத்தை எடுக்க போறீங்க?
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி படத்தின் 2-வது பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல், தீபிகா படுகோனே மற்றும் ஏராளமான நட்சத்திரங்களின் கேமியோ நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கல்கி. 3 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் நீண்ட இந்த படம் ஆரம்பத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் கூட வசூலில் 1௦௦௦ கோடிகளை தொட்டு சாதனை படைத்தது.
மகாபாரதம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கலந்து சொல்லிய இப்படம் இரண்டாவது பாகமாகவும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்படத்தின் 2-வது பாகம் 3 வருடங்கள் கழித்து வருகின்ற 2028-ம் ஆண்டில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2025-ம் ஆண்டே படப்பிடிப்பு தொடங்கினாலும் கூட படப்பிடிப்பு முடிந்து திரையரங்குகளில் வெளியாக 3 வருடங்கள் ஆகுமாம். முதல் பாகத்தில் கமலின் நடிப்பால் 2-வது பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
ஆனால் 3 வருடங்கள் இடைவெளி என்பது இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதோடு தொடர்ந்து இதிகாச படங்களில் நடிக்கும் பிரபாஸ் இதனால் 3 ஆண்டுகள் வரையில் கூட சில படங்களில் சிக்கிக்கொள்கிறார்.
இதனால் பொதுவாக பிரபாஸின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் வசூல்ரீதியாக பிரபாஸ் படங்கள் சாதனை படைத்து வருவதால் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு கிடைப்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.