கார்த்திக் மீது எக்கச்சக்க புகார்… ஆனாலும் அவருக்கு ஏன் நிறைய பட வாய்ப்புகள் வந்ததுன்னு தெரியுமா?
நவரச நாயகன் கார்த்திக், அந்த காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர். அது மட்டுமல்லாது சினிமா துறையில் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவும் வலம் வந்தார். இவரின் வசீகரத்துக்கு பல ஹீரோயின்கள் மயங்கிக்கிடந்தார்கள் என சினிமாத்துறையை சேர்ந்த பலரும் கூறியதுண்டு.
எனினும் கார்த்திக் குறித்து சமீப காலமாக பல பேட்டிகளில் கலந்துகொண்டு வரும் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஒரே மாதிரியான புகாரை அவர் மீது வைப்பதை பார்க்க முடிகிறது. அதாவது கார்த்திக் படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார் எனவும் சில நேரங்களில் படப்பிடிப்பிற்கே வராமல் அறையிலேயே கதவை மூடிக்கொண்டு படுத்துவிடுவார் எனவும் கூறுவார்கள்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் கார்த்திக் குறித்து ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதாவது “கார்த்திக் எப்படி எல்லாம் டார்ச்சர் செய்வார் என்று நிறைய தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது கார்த்திக் எப்படி 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பயணித்துக்கொண்டிருந்தார். தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் திருந்திருப்பாரே” என்று கேட்டிருந்தார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் “கார்த்திக் மட்டுந்தான் தமிழ் சினிமாவில் பிரச்சனை கொடுக்கும் நடிகராக இருந்தாரா என்ன? இப்போ பிரச்சனை கொடுக்கின்ற நடிகர்களே இல்லையா? எத்தனை நடிகர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை கொடுத்து வருகிறார்கள் என உங்களுக்கே நன்றாக தெரியும்.
ஆனாலும் அதை எல்லாம் மீறி அவர்களை வைத்து தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அந்த நடிகருடைய திரைப்படங்கள் ஓரளவு வெற்றிப்பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதனால்தான்.
இப்படி பிரச்சனை செய்கின்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெற்றிபெறாத ஒரு நிலை வரும்போது நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அந்த நடிகரை கைவிட்டுவிடுவார்கள். அதன் பிறகு அந்த நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிலைதான் கார்த்திக்கிற்கும் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டது. இன்றைக்கு தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் அப்படி ஒரு நிலை நிச்சயமாக வரும்” என பதிலளித்திருந்தார்.
இதையும் படிங்க: மீண்டும் தயாராகிறது சிவாஜியின் அந்த மாஸ் ஹிட் திரைப்படம்… யார் நடிக்கிறாங்கன்னு தெரியுமா!!