சமந்தா விவகாரம்!.. கங்கனா ரணாவத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...
நடிகை சமந்தா - நடிகர் நாகை சைத்தன்யா திருமண முறிவு செய்திதான் தற்போது சினிமா உலகில் பேசுபொருளாக உள்ளது. அவர்களுக்குள் என்ன பிரச்சனை? இதன் பின்னணி என்ன? என பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக பாலிவுட் நடிகையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோகிராபி படமான தலைவி படத்தில் நடித்த நடிகை கங்கணா ரனாவாத் சமந்தாவின் விவாகரத்துக்கு பாலிவுட் நடிகர் அமீர்கானே காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். அமீர்கான் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நாகை சைத்தன்யா நடித்து வருகிறார். எனவே, அமீர்கானின் அறிவுரைப்படியே நாக சைத்தன்யா சம்ந்தாவை பிரிந்ததாக அவர் கொளுத்திப்போட்டார்.
இந்நிலையில், நாக சைத்தன்யாவின் மாமனும், நடிகருமான வெங்கடேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ‘ஒன்றை பேசும் முன்பு நம் மனதை திறக்க வேண்டும்.மனம் என்பது எண்ணங்களின் போக்குவரத்து. உங்கள் வழிகளை கவனமாக தேர்ந்தெடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவுரையை அவர் கங்கனா ரனாவத்திற்குதான் கூறியுள்ளார் என பலரும் கருதி வருகின்றனர்.