சரிந்து விழுந்த 200 அடி உயர அஜித் கட்அவுட்!.. குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை!…

good bad ugly
சினிமா நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பது என்பது பல வருடங்களாகவே ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால், சாலையில் பேனர் வைக்கக்கூடாது போன்ற பல கெடுபிடிகளால் தமிழகத்தில் இப்போது கட் அவுட்கள் அவ்வளவாக வைப்பது இல்லை. அதேநேரம் தியேட்டர்களில் சிறிய அளவிலான க்ட் அவுட்கள் மற்றும் பிளக்ஸ் வைப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சில சமயம் இது போன்ற கட் அவுட் வைக்கப்படும்போது அது விபத்திலும் முடிகிறது. கட் அவுட்டுக்கு பால் ஊற்றிய ரசிகர் மேலே இருந்து கீழே விழுந்த சம்பவமெல்லாம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட ஆந்திராவில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்கள் வைத்திருந்த பேனர் பற்றி எரிந்தது.
இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்ததால் தமிழகத்தை பொறுத்தவரை கட் அவுட் வைக்க வேண்டாம் என ரசிகர்களே சொல்லிவிட்டதால் இப்போது அது குறைந்துவிட்டது. இந்நிலையில்தான் குட் பேட் அக்லிக்காக வைக்கப்பட்ட பெரிய பேனர் ஒன்று சரிந்து விழுந்திருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் இது. வருகிற 10ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
ஏனெனில், ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் கொடுக்கும் பல காட்சிகளில் டீசர் மற்றும் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது. அஜித்தை இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அஜித் ஏற்கனவே நடித்து வெளியான தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் ரெப்ரன்ஸையும் குட் பேட் அக்லி படத்தில் வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
திருநெல்வேலி பி.எஸ்.எஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் ரசிகர்கள் 200 அடி உயர கட் அவுட் வைத்திருந்தார்கள். ஆனால், அது சரிந்து விழுந்துவிட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உயரமான கட் அவுட் வைப்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Good Bad Ugly அஜித் கட் அவுட் சரிந்து விழும் காட்சி.
— Blue Sattai Maran (@tamiltalkies) April 6, 2025
திருநெல்வேலி PSS மல்டிப்ளெக்ஸ்.
உயரமான கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்குமா அரசு? pic.twitter.com/RNmc6KGwOC