சூர்யாவுக்கு சுக்கிரதிசை ஸ்டார்ட் போல!.. அடுத்த படம் ஆரம்பிக்கும் முன்னே இத்தனை கோடிக்கு பிசினஸா?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ46 கோடி வசூலை அள்ளி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக வெங்கி அட்லூரியுடன் இணையவுள்ள படத்திற்கு ஒடிடி உரிமையை முன்னதாகவே விற்றுள்ளனர்.
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் படுதோல்விக்கு பின் வெளியான வெளியான ரெட்ரோ கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊர் ஊராக சென்று பேட்டியளித்தார் சூர்யா. வசூல் ரீதியாக ரெட்ரோ வெற்றி பெறும் எனக் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கர்நாட்கா, கேரளா என மற்ற மாநிலங்களிலும் படம் சக்கைப்போடு போட்டு வருகிறது.

ரெட்ரோவை தொடர்ந்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். அதில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும், சூர்யா 45 படத்தில் ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா, இந்திரன்ஸ், நட்டி சுப்பிரமணியம், சுப்ரீத் ரெட்டி ஆகியோர் துணை வேடங்களில் நடித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெங்கி அட்லுரி படத்தில் கமிட்டாக உள்ளார் என்கின்றனர். இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில் அந்த படத்தின் ஒடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் ரூ85 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறுகின்றனர். வெங்கி அட்லுரி இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் இப்படமும் வெற்றி பெரும் என்பதை மனதில் கொண்டு படப்பிடிப்பிற்கு முன்னதாகவே படத்தின் உரிமையை நெட்ப்ளிக்ஸ் வாங்கி உள்ளது. சூர்யா தனது 45வது படத்தை முடித்துவிட்டு விரைவில் வெங்கி அட்லுரியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.