சூர்யாவை கலட்டிவிட்டு உலக நாயகனுடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன்!... அப்போ வாடிவாசல் அவ்வளவுதானா?
வெற்றிமாறன் தற்போது “விடுதலை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எனினும் இத்திரைப்படத்தின் அறிவிப்பிற்கு முன்பே “வாடிவாசல்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்துவிட்டது. மேலும் சூர்யாவை வைத்து ஒரு பரிசோதனை படப்பிடிப்பையும் எடுத்தார்கள். அந்த காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் காட்சிப்படுத்தப்பட்டவை அனைத்தும் சிறப்பாக இருந்ததால் “வாடிவாசல்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதனிடையே வெற்றிமாறன் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. கமல்ஹாசன் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், இயக்குனர் மணி ரத்னமுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோருடன் கமல்ஹாசன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
“விடுதலை” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்கப்போகிறார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது “விடுதலை” திரைப்படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறதாம். ஆதலால் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்குள் தொடங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
சி.சு.செல்லப்பா எழுதிய “வாடிவாசல்” நாவலை வெற்றிமாறன் திரைப்படமாக இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்ததில் இருந்தே இத்திரைப்படம் எப்போது வெளிவரும் என ஆவலோடு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் கமல்ஹாசனை வைத்து இயக்கப்போகிறார் என்று வெளிவரும் செய்தி சூர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் கமல்ஹாசனின் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: டைட்டிலை ஆட்டையைப்போட்டு கண்ணதாசனின் பெயரை மறைத்த மர்ம நபர்கள்… இப்படி ஒரு அநியாயம் எங்கயாவது நடக்குமா?