தெலுங்கில் கல்லா கட்டும் தமிழ் நடிகை... ஒரே நாளில் 11.1 கோடி வசூல்.....

by adminram |   ( Updated:2021-09-27 02:30:12  )
sai-pallavi-2
X

மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே தமிழ் நடிகை என்ற பெருமை நடிகை சாய் பல்லவியையே சேரும். தமிழ் நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமாவை இவரை சரியாக பயன்படுத்த தவறிவிட்டதே என்றே கூற வேண்டும். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள சாய் பல்லவி மலையாளம் மற்றும் தெலுங்கில் பட்டையை கிளப்பி வருகிறார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் தான் சாய் பல்லவி. முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். இதுவரை எந்த ஒரு நடிகைக்கும் இந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் சாய் பல்லவிக்கு கிடைத்தது. அவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

sai-palavi-01

sai palavi

மலையாளத்தில் இருந்து அப்படியே தெலுங்கு சினிமாவிற்கு சென்ற சாய்பல்லவி அங்கும் அவரது திறமையை காட்டினார். தற்போது பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா உடன் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி என்ற படம் வெளியாகி உள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டு வெளியாகும் பெரிய படம் என்றால் அது இதுதான்.

ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பெல் பாட்டம் படமே முதல் நாளில் வெறும் 3.55 கோடி மட்டுமே வசூல் செய்தது. ஆனால் லவ் ஸ்டோரி படம் முதல் நாளில் மட்டும் சுமார் 11.1கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் இப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.

இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகையும் இதர மொழி சினிமாவில் நிலைத்து நின்றதில்லை. ஆனால் சாய் பல்லவி அறிமுகமானதே இதர மொழியில் தான். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு அக்கட தேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. தற்போது மற்ற நடிகைகளை ஓரம் கட்டி டோலிவுட்டில் டாப் நடிகைகள் பட்டியலில் சாய் பல்லவி முதல் இடத்தில் உள்ளாராம்.

Next Story