நம்பர் நடிகையை கட்டம் கட்டும் தயாரிப்பு நிறுவனம்.... ஒரு கை பார்க்கலாம் என கெத்து காட்டும் நடிகை....!

by ராம் சுதன் |
tamil cinema gossip
X

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அந்த நம்பர் நடிகை. பல ஆண்டுகளாக தனது மார்க்கெட்டை துளியும் இறங்காமல் மிகவும் கவனமாக இருந்து வரும் நம்பர் நடிகை சமீபகாலமாக நடிப்பை தாண்டி பிற தொழில்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிப்பில் எப்படி நடிகை நம்பர் ஒன்னாக இருக்கிறாரோ அதேபோல அவரின் தொழிலிலும் டாப்பில் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் நடிகையின் இந்த வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லையாம். மேலும் நடிகையின் இந்த வளர்ச்சி சிலருக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கி வருகிறதாம்.

அதனால் தொழில் போட்டி காரணமாக நம்பர் நடிகைக்கு சிலர் தொடர்ந்து தொல்லைகளை கொடுக்கும் விதமாக பல வேலைகளை செய்து வருகிறார்களாம். அந்த வகையில் திடீரென தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு, நடிகை பற்றிய அவதூறு செய்திகள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட அந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தான் காரணம் என கூறப்படுகிறது.

அதாவது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய வாய்ப்பு ஒன்றை நம்பர் நடிகை பக்கா பிளான் போட்டு தன் பக்கம் திருப்பிக் கொண்டாராம். அதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல நடிகையின் படங்களை ஓடவிடாமல் பண்ணவும், அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை கெடுக்கவும் அந்த தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறதாம்.

இதில் ஹைலைட் என்னவென்றால் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த பிளான் எல்லாம் நம்பர் நடிகைக்கு அரசல் புரசலாக தெரிந்துவிட்டது. இருப்பினும் எந்த பதற்றமும் இல்லாமல், தொழில் போட்டி காரணமாகத்தானே இதெல்லாம் பண்றாங்க பண்ணட்டும் பார்த்துக்கலாம் என கெத்தாக கூறிவிட்டாராம்.

Next Story