இதுவரை தப்பான தீர்ப்பு! வெங்கட் பட்டுக்கு எதிராக கிளம்பிய புது சர்ச்சை.. அட பாவமே

by Rohini |   ( Updated:2024-05-26 03:18:11  )
venkat
X

venkat

Venkat Butt: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. நான்கு சீசன்களை கடந்து இப்போது ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செப் வெங்கட் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்தனர். விஜய் டிவி பிரபலங்கள் சில பேர் கோமாளிகளாக இருந்தனர். இந்த நிகழ்ச்சி சமையலையும் தாண்டி ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாகவும் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.

வெங்கட் பட் இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் நம்பிக்கைக்குறியவர் ஆக இருந்தார். ஆனால் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கட் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்து வருகிறார். வெங்கட் பட் இப்போது சன் டிவியில் இதே மாதிரியான ஒரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். டாப் குக் டூப் குக் என்ற பெயரில் சன் டிவியில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

இதையும் படிங்க: அனிருத் இசைக்கு கிட்டக்கூட வரலையே!.. தனுஷிடம் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு!..

இதிலும் விஜய் டிவியின் சில பிரபலங்கள் கோமாளிகளாக இருக்கின்றனர். அவர்களுடன் நடிகை சோனியா அகர்வால், வில்லன் நடிகர் தீனா, பிரபல பாடகி சிவாங்கியின் அம்மா பின்னி போன்ற பல முக்கிய பிரபலங்கள் குக்குகளாக களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் வெங்கட் எதிராக சமூக வலைதளங்களில் பல சர்ச்சையான கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

சுத்த வெஜிடேரியனான வெங்கட் பட் அசைவ உணவுகளை ருசி பார்க்காமல் தீர்ப்பு சொல்வது சரியா என்பது பற்றி சில விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றது. அவருக்கு எதிராக பிரபல சமையல் நிபுணரான வினோத் என்பவரும் இதைப்பற்றி அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். வினோத்தும் 26 வருடங்களாக கேட்டரிங் துறையில் பணிபுரிந்து வருகிறாராம். இவரும் வெஜிடேரியன் தானாம்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துக்கு காசை கறக்கும் கவுண்டமணி! ரம்பாவுக்கும் காசு கொடுத்தாரா? இது என்ன புதுசா இருக்கு?

ஆனால் எப்பொழுது சமையல் துறைக்கு வந்தாரோ அதிலிருந்து இவரும் அசைவம் சாப்பிட தொடங்கி விட்டாராம். ஏனெனில் எந்த உணவுகளானாலும் ருசி பார்த்தே தான் அதனுடைய தரத்தை சொல்ல முடியும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். அந்த உப்பை நம் நாக்கால் தான் ருசி பார்க்க முடியும். அதற்கு அசைவம், சைவம் என தரம் பிரிக்க தெரியாது.

vinoth

vinoth

அதனால் அசைவு உணவுகளானாலும் சரி சைவ உணவுகள் ஆனாலும் சரி அதை ருசி பார்த்து தான் சொல்ல முடியும். ஆனால் வெங்கட் பட் அசைவ உணவுகளை இதுவரை எப்படி ருசித்து பார்க்காமல் தீர்ப்பு சொன்னார் என தெரியவில்லை. டிவி நிகழ்ச்சிகளை பொறுத்தவரைக்கும் கோமாளி ,டூப் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடந்து வந்தாலும் எதார்த்தத்தில் இப்படி ருசி பார்க்காமல் தீர்ப்பு சொல்வது மிகவும் கோமாளித்தனமாக இருக்கிறது என செஃப் வினோத் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் பண்ண வேலை!.. சிக்கலில் சிக்கித் தவிக்கும் விஜய்.. அதுக்காகத்தான் இத்தனை பேரா?..

Next Story