Connect with us

Cinema News

அனிருத் இசைக்கு கிட்டக்கூட வரலையே!.. தனுஷிடம் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு!..

இந்தியன் 2 பாடல் வந்ததும் ஏ.ஆர். ரஹ்மான் போல இசை இல்லையே என அனிருத்தை பலரும் ட்ரோல் செய்தனர். பாரா பாடல் பக்காவாக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாட அனிருத் சற்றே ஹேப்பியானார். ஆனால், அவருக்கு உடனடியாக செக் வைக்கும் விதமாக தனுஷ் நடித்துள்ள ராயன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த செகண்ட் சிங்கிள் போட்டியாக வெளியானது.

சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியான பாடல் தர லோக்கல் கானா பாடலாக உருவாகி உள்ளது. ரசிகர்கள் அதை ரசித்து வந்தாலும், அந்த பாடல் யூடியூபில் பெரிதாக சாதனை ஏதும் புரியவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் போலவே இல்லை என்கிற விமர்சனங்கள் கடுமையாக எழுந்து வந்த நிலையில், அந்த பாடலை புரமோட் செய்ய தற்போது தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் கானா காதர் எனும் லிரிக்ஸ் ரைட்டரை வைத்து தற்போது ஒரு புரமோவை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆக்‌ஷன் எல்லாம் தாறுமாறா இருக்கே!.. வெள்ளி விழா நாயகன் மோகனின் ’ஹரா’ டிரெய்லர் அசத்துது.. படம்?..

பொதுவாக பாடல் வெளியாவதற்கு முன்பாகத்தானே புரமோ வெளியாகும் என்றும் இப்படி பாடல் வெளியாகி ஹிட் அடிக்காத நிலையில், புரமோ ஏன் வந்தது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் படமான மாரி 2 படத்துக்கு போடப்பட்ட ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் வியூஸ் அடித்த நிலையில், தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் காம்போவை பெரிதாக ரசிகர்கள் ரசிக்கவில்லையா? என்றே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேஜிஎஃப் இயக்குநருடன் சண்டை போட்ட பிரபாஸ்!.. அந்த படம் அவ்ளோதான் இனி வராதுன்னு சொல்றாங்க?..

அனிருத் இசையில் இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆன பாரா பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த படம் 4 மில்லியன் வியூஸ் கடந்து வைரலாகி வருகிறது.

விஜய் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தால் இந்நேரம் 10 மில்லியன் வியூஸ் மேல் தாண்டியிருக்கும் என்றும் இதுவே குறைவு தான் என சொல்லி வந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நேற்று வெளியான “வாட்டர் பாக்கெட்” பாடல் 24 மணி நேரத்தில் வெறும் 6 லட்சம் வியூஸ் மட்டுமே பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அந்த நடிகருடன் நெருக்கமாக நடித்த ஜெயலலிதா!.. காட்சிகளை வெட்ட சொன்ன எம்.ஜி.ஆர்!..

 

google news
Continue Reading

More in Cinema News

To Top