Connect with us

Cinema News

ஆக்‌ஷன் எல்லாம் தாறுமாறா இருக்கே!.. வெள்ளி விழா நாயகன் மோகனின் ’ஹரா’ டிரெய்லர் அசத்துது.. படம்?..

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன், அனுமோல், யோகி பாபு, அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சாரு ஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மோகனுக்கு ஜோடியாக குஷ்பூ நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தப் படத்தில் குஷ்பூ நடிக்கவில்லை என்று தெரிகிறது அவருக்கு பதிலாக அனுமோல் மோகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கேஜிஎஃப் இயக்குநருடன் சண்டை போட்ட பிரபாஸ்!.. அந்த படம் அவ்ளோதான் இனி வராதுன்னு சொல்றாங்க?..

தனது மகள் இறந்த நிலையில், பழி வாங்கும் தந்தையாக மோகன் எதிரிகளை போட்டுத் தள்ளும் காட்சிகள் டிரைலர் முழுக்க நிறைந்திருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்திலும் மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸை பார்த்த ரசிகர்கள் கோட் படத்திலும் அவர் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் ரஜினி, விஜயை விட கமலுக்கே முதலிடம் கொடுத்த பிரபலம்…! ஏன்னு தெரியுமா?

ஹரா திரைப்படத்திற்காக மோகன் கடுமையான நடித்திருப்பது தெரிகிறது. ஆனால், வரும் ஜூன் 7ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வருவார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த வாரம் ராமராஜன் நடித்த வெளியான சாமானியன் திரைப்படம் சரியாக ஓடாத நிலையில், அதே நிலைமை மோகன் படத்துக்கும் வராமல் இருக்க வேண்டும் அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். பயணங்கள் முடிவதில்லை என்கிற வசனம் மற்றும் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை நாயகன் டானாக காட்டும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது.

இதையும் படிங்க: பசங்க ஹார்ட்டு ரொம்ப வீக்கு!.. சைனிங் உடம்பை விதவிதமா காட்டும் நிவிஷா…

google news
Continue Reading

More in Cinema News

To Top