Connect with us

Cinema News

கேஜிஎஃப் இயக்குநருடன் சண்டை போட்ட பிரபாஸ்!.. அந்த படம் அவ்ளோதான் இனி வராதுன்னு சொல்றாங்க?..

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் படத்தை இயக்கி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அவரை அப்படியே அழைத்து வந்து தெலுங்கில் ஒரு படம் செய்ய வேண்டும் என பிரபாஸ் முடிவு செய்தார்.

சலார் எனும் படத்தை பிரபாஸை வைத்து பிரசாந்த் நீல் இயக்கிய நிலையில் கடந்த ஆண்டு அந்த படம் வெளியானது. அந்த படம் வசூல் ரீதியாக வேலூர் கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: கர்ப்ப காலத்திலும் நடிப்புதான் முக்கியம்! அப்படி நடித்த சீரியல் நடிகைகளின் லிஸ்ட் இதோ

நடிகர் பிரபாஸை உச்சகட்ட பில்டப் உடன் காட்டி தொடர் தோல்வியிலிருந்து காப்பாற்றி இருந்தால் பிரசாந்த் நீல். இந்நிலையில் அடுத்ததாக சலார் 2 செளரங்யா பர்வம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுக்கான படப்பிடிப்பும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

பிருத்திவிராஜுக்கு இரண்டாம் பாகத்தில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என சமீபத்தில் அவரும் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சலார் 2 திரைப்படம் மொத்தமாக நிறுத்தப்பட்டது என்றும் இதற்கு மேல் அந்த படம் வெளியாக வாய்ப்பே கிடையாது என அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பிரம்மாண்டமான செட் போட்ட தமிழ் சினிமா உலகம்… டி.ராஜேந்தருக்கே முன்னோடி இவங்கதானாம்!

பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதல் தான் இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் பிரபாஸ் ஓவர் வெயிட் போட்டதற்கும் சலார் படம் தான் காரணம் என்றும் அவரால் மீண்டும் பழைய நிலைமைக்கு வர முடியவில்லை என்றும் அதனால் தொடர்ந்து அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற கல்கி படத்தின் நிகழ்ச்சியில் கூட பிரபாஸ் லுக் அனைவராலும் கலாய்க்கப்பட்டது பிரபாஸ் ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தி அதைவிட நடிகர் பிரபாஸை ரொம்பவே அப்செட் ஆக்கியதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பசங்க ஹார்ட்டு ரொம்ப வீக்கு!.. சைனிங் உடம்பை விதவிதமா காட்டும் நிவிஷா…

google news
Continue Reading

More in Cinema News

To Top