Cinema News
அந்தப் படம் இன்னொரு கில்லியா…? நம்பவே முடியாத பல தகவல்களைச் சொல்லும் நடிகர் ஸ்ரீகாந்த்..!
2002ல் நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் இடையிடையே தெலுங்கு பக்கமும் போய் காலூன்றினார். அங்கு இவர் ஸ்ரீராம் என்ற பெயரில் நடித்தார். ஏன்னா அங்கு ஏற்கனவே ஒரு ஸ்ரீகாந்த் இருக்கிறார். அதனால் பெயர் மாற்றம் செய்து கொண்டாராம்.
முதலில் சாக்லேட் பாயாக இருந்தவர் மெல்ல மெல்ல ஆக்ஷன் பக்கம் திரும்பினார். பம்பரக்கண்ணாலே படத்திற்கு எல்லா சென்டர்களிலும் நல்ல வரவேற்பு இருந்ததாம். அதே போல தன்னோட ஒரு படம் இன்னொரு கில்லி என்றும் சொல்கிறார். வேறு என்னவெல்லாம் சொல்கிறார் என்று பார்க்கலாமா…
இதையும் படிங்க… இவர் ஹீரோன்னா படத்தை வாங்க மாட்டோம்!.. முதல் படத்தில் வந்த நெருக்கடி!.. மனமுடைந்த எம்.ஜி.ஆர்…
சௌகார் பேட்டை படத்தோட டைரக்டர்கிட்ட கேட்டேன். சொன்ன கதை என்ன? எடுத்த கதை என்ன? எடுக்கற கதை என்னன்னு கேட்டேன். 3வது நாளே எனக்குத் தெரியும். நான் தயாரிப்பாளர்கிட்ட இதை நிப்பாட்டிக்கலாம்னு ஏற்கனவே சொன்னேன். அந்தப் படம் மத்தவங்க மத்தியில பிளாப்பா இருந்தாலும் நல்ல பிசினஸ் ஆச்சு.
ஜூட் படம் பொருளாதார ரீதியா பெரிய சக்சஸ். பார்த்திபன் படத்துக்கு 4 வாரம் கிடைச்சது இந்தப் படத்துக்கு ஒரு வாரத்துல கிடைச்சது. அதுதான் உண்மை. ஆனா பார்த்திபன் கனவு ஹிட். ஏப்ரல் மாதத்தில் படத்தை விட மனசெல்லாம் பொருளாதார ரீதியா நல்ல வசூல். போஸ் படத்தை இங்கே இரண்டரை நாள் லேட்டா ரிலீஸ் பண்ணினாங்க. அந்தப் படத்தோட டிரெய்லர் பார்த்துட்டு உதயம் தியேட்டர்ல வெளியே 3000 பேர் நிக்கிறாங்க.
ஒவ்வொரு ஷோவும் வெயிட் பண்ணி கேன்சல் ஆகுது. டிசம்பர் கடைசில ரிலீஸ் பண்ணி பொங்கலுக்கு முன்னால தூக்கிடுறாங்க. திட்டம்போட்டு தோல்வி அடையச் செய்த படம். சம்பளத்துல பாதி பேருக்கு அவரோட கடனுக்கு நான் கொடுத்து தியாகம் பண்ணிருக்கேன். 2 வருஷம் தியாகம் பண்ணிருக்கேன். அதுக்காக பண்ணாத சண்டையில்லை. ஆனா அந்தப் படத்தை இன்னைக்கு வரைக்கும் எல்லாரும் பார்த்துட்டு சூப்பர் படம்னு சொல்வாங்க.
இதையும் படிங்க… இசையுலகில் நடக்கும் குழப்பங்கள்… இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் கண்டுகொள்வார்களா?
அந்தப் படம் ‘இன்னொரு கில்லி’ன்னு சொன்னவங்க இருக்காங்க. அந்தப் படம் தெலுங்குல சூப்பர்ஹிட். ஆனா இங்க ஒரு ஹீரோவின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்துத் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறாங்க. இது தான் உண்மை. எவ்வளவு நாள் தான் இங்க வந்து நான் அசிங்கப்படுறது என மனம் உடைந்து அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.