Connect with us
rajkiran

Cinema History

இதெல்லாம் ஒரு படமா?!.. மணிரத்னம் படம் பார்த்துவிட்டு நடிகரை திட்டிய ராஜ்கிரண்!…

தமிழ் சினிமாவில் இரண்டு வகை அபிமானிகள் உண்டு. இளையராஜாவை கடவுளாக பார்ப்பவர்கள் மற்றும் அப்படி பார்க்காதவர்கள். 80, 90களில் பல திரைப்படங்களை இளையராஜா தனது இசையால் ஓட வைத்ததால் பலராலும் அவர் அப்படி பார்க்கப்பட்டார். இளையராஜாவின் இசை இருந்தால் போதும். படம் ஓடிவிடும் என்கிற நம்பிக்கை அப்போது பல இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இருந்தது.

இளையராஜாவும் அவர்களின் நம்பிக்கை வீணாக்கியதில்லை. தனது இசையால் பல படங்களை ஓட வைத்தார். தனது பின்னணி இசையால் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தார். ஆனால், எல்லா துறையிலும் மாற்றம் வருவதை தவிர்க்க முடியாது. ரோஜா திரைப்படம் மூலம் ஏ.ஆர்.ரகுமான் வந்தார்.

இதையும் படிங்க: அந்தப் படம் இன்னொரு கில்லியா…? நம்பவே முடியாத பல தகவல்களைச் சொல்லும் நடிகர் ஸ்ரீகாந்த்..!

அவரின் துள்ளலான இசை இளைஞர்களை கட்டிப்போட்டது, ஆட வைத்தது. ரகுமான் இசையில் ஒரு புதிய ஒலியை ரசிகர்கள் உணர்ந்தார்கள். அவருக்கென ரசிகர்கள் உருவானார்கள். அவரும் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என அடித்து ஆடினார். எனவே, சினிமா உலகில் சிலர் ரகுமான் பக்கம் சென்றனர்.

marimuthu and ilayaraja

இளையரஜாவை கடவுளாக பார்க்கும் நபர்களில் ராஜ்கிரணும் ஒருவர். என் ராசாவின் மனசிலே படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை என்பது உறுதியான போது ‘நீங்களே ஹீரோவாக நடியுங்கள்’ என ராஜ்கிரணை உற்சாகப்படுத்தியவர் இளையராஜாதான். மேலும், அப்படத்தில் அற்புதமான பாடல்களை கொடுத்து படத்தை ஓடவைத்தார்.

அதன்பின் ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதன் ஆகிய படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார். ராஜ்கிரணிடம் உதவியாளராக இருந்தவர்தான் மறைந்த நடிகர் மாரிமுத்து. ஊடகம் ஒன்றில் பேசிய மாரிமுத்து ‘தமிழ் சினிமாவின் கதை ஒரே மாதிரி இருந்தது. திரையுலகம் இளையராஜாவை சுற்றியே இயங்கியது.

Roja

Roja

அதில் கொஞ்சம் உடன்பாடு இல்லாமல் நான் இருந்தபோதுதான் ரோஜா படம் வந்தது. நவீன சினிமாவை பார்க்க விரும்பிய எனக்கு அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 10 நாட்களாக நச்சரித்து ராஜ்கிரணை அழைத்து கொண்டே போய் அந்த படத்தை பார்க்க வைத்தேன். படம் முடிந்ததும் அவர் ‘இது ஒரு படமா?.. உன்னோட ரசனை ஏன் இப்படி இருக்கு?’ என என்னை திட்டிவிட்டார்.

இளையராஜாவுக்கு எதிரான படம் என்பது போல அவர் பேசினார். ‘நல்ல படம்தான் சார். நாம லோக்கலா யோசிக்கிறோம். நாம தமிழ்நாட்டு படம் எடுக்கிறோம் ஆனா, மணிரத்னம் ஒரு தேசிய படம் எடுத்திருக்கிறார்’ என ரோஜா படத்தை ஆதரித்து பாராட்டி பேசினேன். அது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, ஒருகட்டத்தில் என்னை ஓரங்கட்ட துவங்கினார். எனவே, அவரிடமிருந்து வெளியேறிவிட்டேன்’ என மாரிமுத்து பேசி இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top